Kural 1081அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழைமாதர்கொல் மாலுமென் நெஞ்சுAnangukol Aaimayil Kollo Kananguzhai Maadharkol Maalum En NenjuEnglish meaning (G. U. Pope)Is this jewelled female a celestial, a choice peahen, or a human being ? My mind is perplexedEnglish verse translation (G. U. Pope)Goddess? or peafowl rare? She whose ears rich jewels wear, Is she a maid of human kind? All wildered is my mindTamil commentary (Kalaignar)எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்Hindi meaningक्या यह है देवांगना, या सुविशेष मयूर । या नारी कुंड़ल-सजी, मन है भ्रम में चूर ॥Chapter 109: தகை அணங்குறுத்தல்
Kural 1082நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்குதானைக்கொண் டன்ன துடைத்துNokkinaal Nokkedhir Nokkudhal Thaakkanangu Thaanaikkon Tanna ThutaiththuEnglish meaning (G. U. Pope)This female beauty returning my looks is like a celestial maiden coming with an army to contend against meEnglish verse translation (G. U. Pope)She of the beaming eyes, To my rash look her glance replies, As if the matchless goddess' hand Led forth an armed bandTamil commentary (Kalaignar)அவள் வீசிடும் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது தானெருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று, ஒரு தானையுடன் வந்து என்னைத் தாக்குவது போன்று இருந்ததுHindi meaningदृष्टि मिलाना सुतनु का, होते दृष्टि-निपान । हो कर खुद चँडी यथा, चढ़ आये दल साथ ॥Chapter 109: தகை அணங்குறுத்தல்
Kural 1083பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்பெண்டகையால் பேரமர்க் கட்டுPantariyen Kootren Padhanai Iniyarindhen Pentakaiyaal Peramark KattuEnglish meaning (G. U. Pope)I never knew before what is called Yama; I see it now; it is the eyes that carry on a great fight with (the help of) female qualitiesEnglish verse translation (G. U. Pope)Death's form I formerly Knew not; but now 'tis plain to me; He comes in lovely maiden's guise, With soul-subduing eyesTamil commentary (Kalaignar)கூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு முன்பெல்லாம் தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன் அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையைHindi meaningपहले देखा है नहीं, अब देखा यम कौन । लडते विशाल नेत्रयुत, वह है स्त्री-गुण-भौन ॥Chapter 109: தகை அணங்குறுத்தல்
Kural 1084கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்பேதைக் கமர்த்தன கண்Kantaar Uyirunnum Thotraththaal Pentakaip Pedhaikku Amarththana KanEnglish meaning (G. U. Pope)These eyes that seem to kill those who look at them are as it were in hostilities with this feminine simplicityEnglish verse translation (G. U. Pope)In sweet simplicity, A woman's gracious form hath she; But yet those eyes, that drink my life, Are with the form at strifeTamil commentary (Kalaignar)பெண்மையின் வார்ப்படமாகத் திகழுகிற இந்தப் பேதையின் கண்கள் மட்டும் உயிரைப் பறிப்பதுபோல் தோன்றுகின்றனவே! ஏனிந்த மாறுபாடு?Hindi meaningमुग्धा इस स्त्री-रत्न के, दिखी दृगों की रीत । खाते दर्शक-प्राण हैं, यों है गुण विपरीत ॥Chapter 109: தகை அணங்குறுத்தல்
Kural 1085கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்நோக்கமிம் மூன்றும் உடைத்துKootramo Kanno Pinaiyo Matavaral Nokkamim Moondrum UtaiththuEnglish meaning (G. U. Pope)Is it Yama, (a pair of) eyes or a hind ?- Are not all these three in the looks of this maid ?English verse translation (G. U. Pope)The light that on me gleams, Is it death's dart? or eye's bright beams? Or fawn's shy glance? All three appear In form of maiden hereTamil commentary (Kalaignar)உயிர்பறிக்கும் கூற்றமோ? உறவாடும் விழியோ? மருட்சிகொள்ளும் பெண்மானோ? இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்று கேள்விகளையும் எழுப்புகிறதேHindi meaningक्या यम है, या आँख है, या है मृगी सुरंग । इस मुग्धा की दृष्टि में, है तीनों का ढंग ॥Chapter 109: தகை அணங்குறுத்தல்
Kural 1086கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்செய்யல மன்னிவள் கண்Kotumpuruvam Kotaa Maraippin Natungagnar Seyyala Manival KanEnglish meaning (G. U. Pope)Her eyes will cause (me) no trembling sorrow, if they are properly hidden by her cruel arched eyebrowsEnglish verse translation (G. U. Pope)If cruel eye-brow's bow, Unbent, would veil those glances now; The shafts that wound this trembling heart Her eyes no more would dartTamil commentary (Kalaignar)புருவங்கள் வளைந்து கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவள் கண்கள், நான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டாHindi meaningऋजु हो टेढ़ी भृकुटियाँ, मना करें दे छाँह । तो इसकी आँखें मुझे, हिला, न लेंगी आह ॥Chapter 109: தகை அணங்குறுத்தல்
Kural 1087கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்படாஅ முலைமேல் துகில்Kataaak Kalitrinmer Katpataam Maadhar Pataaa Mulaimel ThukilEnglish meaning (G. U. Pope)The cloth that covers the firm bosom of this maiden is (like) that which covers the eyes of a rutting elephantEnglish verse translation (G. U. Pope)As veil o'er angry eyes Of raging elephant that lies, The silken cincture's folds invest This maiden's panting breastTamil commentary (Kalaignar)மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்; அது மங்கையொருத்தியின் சாயாத கொங்கை மேல் அசைந்தாடும் ஆடைபோல் இருந்ததுHindi meaningअनत कुचों पर नारि के, पड़ा रहा जो पाट । मद-गज के दृग ढ़ांकता, मुख-पट सम वह ठाट ॥Chapter 109: தகை அணங்குறுத்தல்
Kural 1088ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்நண்ணாரும் உட்குமென் பீடுOnnudhar Koo Utaindhadhe Gnaatpinul Nannaarum Utkumen PeetuEnglish meaning (G. U. Pope)On her bright brow alone is destroyed even that power of mine that used to terrify the most fearlessEnglish verse translation (G. U. Pope)Ah woe is me my might, That awed my foemen in the fight, By lustre of that beaming brow Borne down, lies broken nowTamil commentary (Kalaignar)களத்தில் பகைவரைக் கலங்கவைக்கும் என் வலிமை இதோ இந்தக் காதலியின் ஒளி பொருந்திய நெற்றிக்கு வளைந்து கொடுத்துவிட்டதே!Hindi meaningउज्जवल माथे से अहो, गयी शक्ति वह रीत । भिड़े बिना रण-भूमि में, जिससे रिपु हों भीत ॥Chapter 109: தகை அணங்குறுத்தல்
Kural 1089பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கணியெவனோ ஏதில தந்துPinaiyer Matanokkum Naanum Utaiyaatku Aniyevano Edhila ThandhuEnglish meaning (G. U. Pope)Of what use are other jewels to her who is adorned with modesty, and the meek looks of a hind ?English verse translation (G. U. Pope)Like tender fawn's her eye; Clothed on is she with modesty; What added beauty can be lent; By alien ornamentTamil commentary (Kalaignar)பெண்மானைப் போன்ற இளமை துள்ளும் பார்வையையும், நாணத்தையும் இயற்கையாகவே அணிகலன்களாகக் கொண்ட இப்பேரழகிக்குச் செயற்கையான அணிகலன்கள் எதற்காக?Hindi meaningसरल दृष्टि हरिणी सदृश, औ’ रखती जो लाज । उसके हित गहने बना, पहनाना क्या काज ॥Chapter 109: தகை அணங்குறுத்தல்
Kural 1090உண்டார்க ணல்லது அடுநறாக் காமம்போல்கண்டார் மகிழ்செய்தல் இன்றுUntaarkan Alladhu Atunaraak Kaamampol Kantaar Makizhseydhal IndruEnglish meaning (G. U. Pope)Unlike boiled honey which yields delight only when it is drunk, love gives pleasure even when looked atEnglish verse translation (G. U. Pope)The palm-tree's fragrant wine, To those who taste yields joys divine; But love hath rare felicity For those that only seeTamil commentary (Kalaignar)மதுவை உண்டால்தான் மயக்கம் வரும்; ஆனால், கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்Hindi meaningहर्षक है केवल उसे, जो करता है पान । दर्शक को हर्षक नहीं, मधु तो काम समान ॥Chapter 109: தகை அணங்குறுத்தல்