Kural 1071மக்களே போல்வர் கயவர் அவரன்னஒப்பாரி யாங்கண்ட தில்Makkale Polvar Kayavar Avaranna Oppaari Yaanganta ThilEnglish meaning (G. U. Pope)The base resemble men perfectly (as regards form); and we have not seen such (exact) resemblance (among any other species)English verse translation (G. U. Pope)The base resemble men in outward form, I ween; But counterpart exact to them I've never seenTamil commentary (Kalaignar)குணத்தில் கயவராக இருப்பர் ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார் மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும்Hindi meaningहैं मनुष्य के सदृश ही, नीच लोग भी दृश्य । हमने तो देखा नहीं, ऐसा जो सादृश्य ॥Chapter 108: கயமை
Kural 1072நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்நெஞ்சத் தவலம் இலர்Nandrari Vaarir Kayavar Thiruvutaiyar Nenjaththu Avalam IlarEnglish meaning (G. U. Pope)The low enjoy more felicity than those who know what is good; for the former are not troubled with anxiety (as to the good)English verse translation (G. U. Pope)Than those of grateful heart the base must luckier be, Their minds from every anxious thought are freeTamil commentary (Kalaignar)எப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களைவிட எதைப் பற்றியும் கவலைப்படாமலிருக்கும் கயவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள்தான்!Hindi meaningचिन्ता धर्माधर्म की, नहीं हृदय के बीच । सो बढ़ कर धर्मज्ञ से, भाग्यवान हैं नीच ॥Chapter 108: கயமை
Kural 1073தேவ ரனையர் கயவர் அவருந்தாம்மேவன செய்தொழுக லான்Thevar Anaiyar Kayavar Avarundhaam Mevana Seydhozhuka LaanEnglish meaning (G. U. Pope)The base resemble the Gods; for the base act as they likeEnglish verse translation (G. U. Pope)The base are as the Gods; they too Do ever what they list to doTamil commentary (Kalaignar)புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம்Hindi meaningनीच लोग हैं देव सम, क्योंकि निरंकुश जीव । वे भी करते आचरण, मनमानी बिन सींव ॥Chapter 108: கயமை
Kural 1074அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்Akappatti Aavaaraik Kaanin Avarin Mikappattuch Chemmaakkum KeezhEnglish meaning (G. U. Pope)The base feels proud when he sees persons whose acts meaner than his ownEnglish verse translation (G. U. Pope)When base men those behold of conduct vile, They straight surpass them, and exulting smileTamil commentary (Kalaignar)பண்பாடு இல்லாத கயவர்கள், தம்மைக் காட்டிலும் இழிவான குணமுடையோரைக் கண்டால், அவர்களைவிடத் தாம் சிறந்தவர்கள் என்ற கர்வம் கொள்வார்கள்Hindi meaningमनमौजी ऐसा मिले, जो अपने से खर्व । तो उससे बढ़ खुद समझ, नीच करेगा गर्व ॥Chapter 108: கயமை
Kural 1075அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம்அவாவுண்டேல் உண்டாம் சிறிதுAchchame Keezhkaladhu Aasaaram Echcham Avaavuntel Untaam SiridhuEnglish meaning (G. U. Pope)(The principle of) behaviour in the mean is chiefly fear; if not, hope of gain, to some extentEnglish verse translation (G. U. Pope)Fear is the base man's virtue; if that fail, Intense desire some little may availTamil commentary (Kalaignar)தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும்போது கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள் மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தின் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்Hindi meaningनीचों के आचार का, भय ही है आधार । भय बिन भी कुछ तो रहे, यदि हो लाभ-विचार ॥Chapter 108: கயமை
Kural 1076அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்டமறைபிறர்க் குய்த்துரைக்க லான்Araiparai Annar Kayavardhaam Ketta Maraipirarkku Uyththuraikka LaanEnglish meaning (G. U. Pope)The base are like a drum that is beaten, for they unburden to others the secrets they have heardEnglish verse translation (G. U. Pope)The base are like the beaten drum; for, when they hear The sound the secret out in every neighbour's earTamil commentary (Kalaignar)மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில், ஓடிச் சென்று பிறருக்குச் சொல்லுகிற கயவர்களைத், தமுக்கு என்னும் கருவிக்கு ஒப்பிடலாம்Hindi meaningनीच मनुज ऐसा रहा, जैसा पिटता ढोल । स्वयं सुने जो भेद हैं, ढो अन्यों को खोल ॥Chapter 108: கயமை
Kural 1077ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்கூன்கையர் அல்லா தவர்க்குEerngai Vidhiraar Kayavar Kotirutaikkum Koonkaiyar Allaa ThavarkkuEnglish meaning (G. U. Pope)The mean will not (even) shake off (what sticks to) their hands (soon after a meal) to any but those who would break their jaws with their clenched fistsEnglish verse translation (G. U. Pope)From off their moistened hands no clinging grain they shake, Unless to those with clenched fist their jaws who breakTamil commentary (Kalaignar)கையை மடக்கிக் கன்னத்தில் ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக் கொடுப்பார்களேயல்லாமல், ஈகைக் குணமில்லாத கயவர்கள் ஏழை எளியோருக்காகத் தமது எச்சில் கைகைக்கூட உதற மாட்டார்கள்Hindi meaningगाल-तोड़ घूँसा बिना, जो फैलाये हाथ । झाडेंगे नहिं अधम जन, निज झूठा भी हाथ ॥Chapter 108: கயமை
Kural 1078சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோலகொல்லப் பயன்படும் கீழ்Sollap Payanpatuvar Saandror Karumpupol Kollap Payanpatum KeezhEnglish meaning (G. U. Pope)The great bestow (their alms) as soon as they are informed; (but) the mean, like the sugar-cane, only when they are tortured to deathEnglish verse translation (G. U. Pope)The good to those will profit yield fair words who use; The base, like sugar-cane, will profit those who bruiseTamil commentary (Kalaignar)குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரி பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்Hindi meaningसज्जन प्रार्थन मात्र से, देते हैं फल-दान । नीच निचोड़ों ईख सम, तो देते रस-पान ॥Chapter 108: கயமை
Kural 1079உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்வடுக்காண வற்றாகும் கீழ்Utuppadhooum Unpadhooum Kaanin Pirarmel Vatukkaana Vatraakum KeezhEnglish meaning (G. U. Pope)The base will bring an evil (accusation) against others, as soon as he sees them (enjoying) good foodEnglish verse translation (G. U. Pope)If neighbours clothed and fed he see, the base Is mighty man some hidden fault to traceTamil commentary (Kalaignar)ஒருவர் உடுப்பதையும் உண்பதையும் கண்டுகூட பெறாமைப்படுகிற கயவன், அவர்மீது வேண்டுமென்றே குற்றம் கூறுவதில் வல்லவனாக இருப்பான்Hindi meaningखाते पीते पहनते, देख पराया तोष । छिद्रान्वेषण-चतुर जो, नीच निकाले दोष ॥Chapter 108: கயமை
Kural 1080எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்விற்றற் குரியர் விரைந்துEtrir Kuriyar Kayavarondru Utrakkaal Vitrarku Uriyar ViraindhuEnglish meaning (G. U. Pope)The base will hasten to sell themselves as soon as a calamity has befallen them. For what else are they fitted ?English verse translation (G. U. Pope)For what is base man fit, if griefs assail? Himself to offer, there and then, for saleTamil commentary (Kalaignar)ஒரு துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள, தம்மையே பிறரிடம் விற்றுவிடுகிற தகுதிதான் கயவர்களுக்குரிய தகுதியாகும்Hindi meaningनीच लोग किस योग्य हों, आयेंगे क्या काम । संकट हो तो झट स्वयं, बिक कर बनें गुलाम ॥Chapter 108: கயமை