Kural 1001வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்செத்தான் செயக்கிடந்த தில்Vaiththaanvaai Saandra Perumporul Aqdhunnaan Seththaan Seyakkitandhadhu IlEnglish meaning (G. U. Pope)He who does not enjoy the immense riches he has heaped up in his house, is (to be reckoned as) dead, (for) there is nothing achieved (by him)English verse translation (G. U. Pope)Who fills his house with ample store, enjoying none, Is dead Nought with the useless heap is doneTamil commentary (Kalaignar)அடங்காத ஆசையினால் வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை அனுபவிக்காமல் செத்துப் போகிறவனுக்கு, அப்படிச் சேர்க்கப்பட்ட செல்வத்தினால் என்ன பயன்?Hindi meaningभर कर घर भर प्रचुर धन, जो करता नहिं भोग । धन के नाते मृतक है, जब है नहिं उपयोग ॥Chapter 101: நன்றியில் செல்வம்
Kural 1002பொருளானாம் எல்லாமென் றீயா திவறும்மருளானாம் மாணாப் பிறப்புPorulaanaam Ellaamendru Eeyaadhu Ivarum Marulaanaam Maanaap PirappuEnglish meaning (G. U. Pope)He who knows that wealth yields every pleasure and yet is so blind as to lead miserly life will be born a demonEnglish verse translation (G. U. Pope)Who giving nought, opines from wealth all blessing springs, Degraded birth that doting miser's folly bringsTamil commentary (Kalaignar)யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தன்னிடமுள்ள பொருளால் எல்லாம் ஆகுமென்று, அதனைவிடாமல் பற்றிக் கொண்டிருப்பவன் எந்தச் சிறப்புமில்லாத இழி பிறவியாவான்Hindi meaning‘सब होता है अर्थ से’, रख कर ऐसा ज्ञान । कंजूसी के मोह से, प्रेत-जन्म हो मलान ॥Chapter 101: நன்றியில் செல்வம்
Kural 1003ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்தோற்றம் நிலக்குப் பொறைEettam Ivari Isaiventaa Aatavar Thotram Nilakkup PoraiEnglish meaning (G. U. Pope)A burden to the earth are men bent on the acquisition of riches and not (true) fameEnglish verse translation (G. U. Pope)Who lust to heap up wealth, but glory hold not dear, It burthens earth when on the stage of being they appearTamil commentary (Kalaignar)புகழை விரும்பாமல் பொருள் சேர்ப்பது ஒன்றிலேயே குறியாக இருப்பவர்கள் பிறந்து வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும் சுமையாகும்Hindi meaningलोलुप संग्रह मात्र का, यश का नहीं विचार । ऐसे लोभी का जनम, है पृथ्वी को भार ॥Chapter 101: நன்றியில் செல்வம்
Kural 1004எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால்நச்சப் படாஅ தவன்Echchamendru Enennung Kollo Oruvaraal Nachchap Pataaa ThavanEnglish meaning (G. U. Pope)What will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come) ?English verse translation (G. U. Pope)Whom no one loves, when he shall pass away, What doth he look to leave behind, I prayTamil commentary (Kalaignar)யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்?Hindi meaningकिसी एक से भी नहीं, किया गया जो प्यार । निज अवशेष स्वरूप वह, किसको करे विचार ॥Chapter 101: நன்றியில் செல்வம்
Kural 1005கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கியகோடியுண் டாயினும் இல்Kotuppadhooum Thuyppadhooum Illaarkku Atukkiya Kotiyun Taayinum IlEnglish meaning (G. U. Pope)Those who neither give (to others) nor enjoy (their property) are (truly) destitute, though possessing immense richesEnglish verse translation (G. U. Pope)Amid accumulated millions they are poor, Who nothing give and nought enjoy of all they storeTamil commentary (Kalaignar)கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லைHindi meaningजो करते नहिं दान ही, करते भी नहिं भोग । कोटि कोटि धन क्यों न हो, निर्धन हैं वे लोग ॥Chapter 101: நன்றியில் செல்வம்
Kural 1006ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்றீத லியல்பிலா தான்Edham Perunjelvam Thaandhuvvaan Thakkaarkkondru Eedhal Iyalpilaa ThaanEnglish meaning (G. U. Pope)He who enjoys not (his riches) nor relieves the wants of the worthy is a disease to his wealthEnglish verse translation (G. U. Pope)Their ample wealth is misery to men of churlish heart, Who nought themselves enjoy, and nought to worthy men impartTamil commentary (Kalaignar)தானும் அனுபவிக்காமல் தக்கவர்களுக்கு உதவிடும் இயல்பும் இல்லாமல் வாழ்கிறவன், தன்னிடமுள்ள பெருஞ்செல்வத்தைத் தொற்றிக்கொண்ட நோயாவான்Hindi meaningयोग्य व्यक्ति को कुछ न दे, स्वयं न करता भोग । विपुल संपदा के लिये, इस गुण का नर रोग ॥Chapter 101: நன்றியில் செல்வம்
Kural 1007அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்பெற்றாள் தமியள்மூத் தற்றுAtraarkkondru Aatraadhaan Selvam Mikanalam Petraal Thamiyalmooth ThatruEnglish meaning (G. U. Pope)The wealth of him who never bestows anything on the destitute is like a woman of beauty growing old without a husbandEnglish verse translation (G. U. Pope)Like woman fair in lonelihood who aged grows, Is wealth of him on needy men who nought bestowsTamil commentary (Kalaignar)வறியவர்க்கு எதுவும் வழங்கி உதவாதவனுடைய செல்வம், மிகுந்த அழகியொருத்தி, தன்னந்தனியாகவே இருந்து முதுமையடைவதைப் போன்றதுHindi meaningकुछ देता नहिं अधन को, ऐसों का धन जाय । क्वाँरी रह अति गुणवती, ज्यों बूढ़ी हो जाय ॥Chapter 101: நன்றியில் செல்வம்
Kural 1008நச்சுப் படாதவன் செல்வம் நடுவூருள்நச்சு மரம்பழுத் தற்றுNachchap Pataadhavan Selvam Natuvoorul Nachchu Marampazhuth ThatruEnglish meaning (G. U. Pope)The wealth of him who is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of a townEnglish verse translation (G. U. Pope)When he whom no man loves exults in great prosperity, 'Tis as when fruits in midmost of the town some poisonous treeTamil commentary (Kalaignar)வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல!Hindi meaningअप्रिय जन के पास यदि, आश्रित हो संपत्ति । ग्राम-मध्य विष-वृक्ष ज्यों, पावे फल-संपत्ति ॥Chapter 101: நன்றியில் செல்வம்
Kural 1009அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டியஒண்பொருள் கொள்வார் பிறர்Anporeeith Tharsetru Aranokkaadhu Eettiya Onporul Kolvaar PirarEnglish meaning (G. U. Pope)To heap up glittering wealth, their hoards shall others takeEnglish verse translation (G. U. Pope)Who love abandon, self-afflict, and virtue's way forsake To heap up glittering wealth, their hoards shall others takeTamil commentary (Kalaignar)அன்பெனும் பண்பை அறவே நீக்கி, தன்னையும் வருத்திக் கொண்டு, அறவழிக்குப் புறம்பாகச் சேர்த்துக் குவித்திடும் செல்வத்தைப் பிறர் கொள்ளை கொண்டு போய் விடுவர்Hindi meaningप्रेम-भाव तज कर तथा, भाव धर्म से जन्य । आत्म-द्रोह कर जो जमा, धन हथियाते अन्य ॥Chapter 101: நன்றியில் செல்வம்
Kural 1010சீருடைச் செல்வர் சிறுதுனி மாரிவறங்கூர்ந் தனைய துடைத்துSeerutaich Chelvar Sirudhuni Maari Varangoorn Thanaiyadhu UtaiththuEnglish meaning (G. U. Pope)The short-lived poverty of those who are noble and rich is like the clouds becoming poor (for a while)English verse translation (G. U. Pope)'Tis as when rain cloud in the heaven grows day, When generous wealthy man endures brief povertyTamil commentary (Kalaignar)சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கேற்படும் சிறிதளவு வறுமையின் நிழல்கூட, மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும்Hindi meaningउनकी क्षणिक दरिद्रता, जो नामी धनवान । जल से खाली जलद का, है स्वभाव समान ॥Chapter 101: நன்றியில் செல்வம்