Kural 771என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னைமுன்னின்று கல்நின் றவர்Ennaimun Nillanmin Thevvir Palarennai Munnindru Kalnin RavarEnglish meaning (G. U. Pope)O my foes, stand not before my leader; (for) many are those who did so but afterwards stood (in the shape of) statuesEnglish verse translation (G. U. Pope)Ye foes stand not before my lord for many a one Who did my lord withstand, now stands in stoneTamil commentary (Kalaignar)போர்களத்து வீரன் ஒருவன், ``பகைவயர்களே என் தலைவனை எதிர்த்து நிற்காதீர்; அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர்'' என முழங்குகிறான்Hindi meaningडटे रहो मत शत्रुओ, मेरे अधिप समक्ष । डट कर कई शिला हुए, मेरे अधिप समक्ष ॥Chapter 78: படைச் செருக்கு
Kural 772கான முயலெய்த அம்பினில் யானைபிழைத்தவேல் ஏந்தல் இனிதுKaana Muyaleydha Ampinil Yaanai Pizhaiththavel Endhal InidhuEnglish meaning (G. U. Pope)It is more pleasant to hold the dart that has missed an elephant than that which has hit hare in the forestEnglish verse translation (G. U. Pope)Who aims at elephant, though dart should fail, has greater praise Than he who woodland hare with winged arrow slaysTamil commentary (Kalaignar)வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறிதப்பினாலும்கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையதுHindi meaningवन में शश पर जो लगा, धरने से वह बाण । गज पर चूके भाल को, धरने में है मान ॥Chapter 78: படைச் செருக்கு
Kural 773பேராண்மை என்ப தறுகனொன் றுற்றக்கால்ஊராண்மை மற்றதன் எஃகுPeraanmai Enpa Tharukanon Rutrakkaal Ooraanmai Matradhan EqkuEnglish meaning (G. U. Pope)The learned say that fierceness (incontest with a foe) is indeed great valour; but to become a benefactor in case of accident (to a foe) is the extreme (limit) of that valourEnglish verse translation (G. U. Pope)Fierceness in hour of strife heroic greatness shows; Its edge is kindness to our suffering foesTamil commentary (Kalaignar)பகைவர்க்கு அஞ்சாத வீரம் பெரும் ஆண்மை என்று போற்றப்படும் அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது அதைத் தீர்க்க உதவிடுவது ஆண்மையின் உச்சம் எனப் புகழப்படும்Hindi meaningनिर्दय साहस को कहें, महा धीरता सार । संकट में उपकार है, उसकी तीक्षण धार ॥Chapter 78: படைச் செருக்கு
Kural 774கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்மெய்வேல் பறியா நகும்Kaivel Kalitrotu Pokki Varupavan Meyvel Pariyaa NakumEnglish meaning (G. U. Pope)The hero who after casting the lance in his hand on an elephant, comes (in search of another) will pluck the one (that sticks) in his body and laugh (exultingly)English verse translation (G. U. Pope)At elephant he hurls the dart in hand; for weapon pressed, He laughs and plucks the javelin from his wounded breastTamil commentary (Kalaignar)கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில் போரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பாயந்திருப்பது கண்டு மகிழ்ந்து அதனைப் பறித்துப் பகையை எதிர்த்திடுகின்றான்Hindi meaningकर-भाला गज पर चला, फिरा खोजते अन्य । खींच भाल छाती लगा, हर्षित हुआ सुधन्य ॥Chapter 78: படைச் செருக்கு
Kural 775விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்ஓட்டன்றோ வன்க ணவர்க்குVizhiththakan Velkona Teriya Azhiththimaippin Ottandro Vanka NavarkkuEnglish meaning (G. U. Pope)Is it not a defeat to the valiant to wink and destroy their ferocious look when a lance in cast at them (by their foe) ?English verse translation (G. U. Pope)To hero fearless must it not defeat appear, If he but wink his eye when foemen hurls his spearTamil commentary (Kalaignar)களத்தில் பகைவர் வீசிடும் வேல் பாயும்போது விழிகளை இமைத்து விட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்குஒப்பாகும்Hindi meaningक्रुद्ध नेत्र यदि देख कर, रिपु का भाल-प्रहार । झपकेंगे तो क्या नहीं, वह वीरों को हार ॥Chapter 78: படைச் செருக்கு
Kural 776விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்வைக்குந்தன் நாளை எடுத்துVizhuppun Pataadhanaal Ellaam Vazhukkinul Vaikkumdhan Naalai EtuththuEnglish meaning (G. U. Pope)The hero will reckon among wasted days all those on which he had not received severe woundsEnglish verse translation (G. U. Pope)The heroes, counting up their days, set down as vain Each day when they no glorious wound sustainTamil commentary (Kalaignar)ஒரு வீரன், தான் வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்த்து அந்த நாட்களில் தன்னுடலில் விழுப்புண்படாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று வெறுத்து ஒதுக்குவான்Hindi meaning‘गहरा घाव लगा नहीं’, ऐसे दिन सब व्यर्थ । बीते निज दिन गणन कर, यों मानता समर्थ ॥Chapter 78: படைச் செருக்கு
Kural 777சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்கழல்யாப்புக் காரிகை நீர்த்துSuzhalum Isaiventi Ventaa Uyiraar Kazhalyaappuk Kaarikai NeerththuEnglish meaning (G. U. Pope)The fastening of ankle-ring by those who disire a world-wide renown and not (the safety of) their lives is like adorning (themselves)English verse translation (G. U. Pope)Who seek for world-wide fame, regardless of their life, The glorious clasp adorns, sign of heroic strifeTamil commentary (Kalaignar)சூழ்ந்து பரவிடும் புகழை மட்டுமே விரும்பி உயிரைப் பற்றிக் கவலைப்படாத வீரர்களின் காலில் கட்டப்படும் வீரக்கழல் தனிப் பெருமை உடையதாகும்Hindi meaningजग व्यापी यश चाहते, प्राणों की नहिं चाह । ऐसों का धरना कड़ा, शोभाकर है, वाह ॥Chapter 78: படைச் செருக்கு
Kural 778உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன்செறினுஞ்சீர் குன்றல் இலர்Urinuyir Anjaa Maravar Iraivan Serinum Seerkundral IlarEnglish meaning (G. U. Pope)The heroes who are not afraid of losing their life in a contest will not cool their ardour, even if the king prohibits (their fighting)English verse translation (G. U. Pope)Fearless they rush where'er 'the tide of battle rolls'; The king's reproof damps not the ardour of their eager soulsTamil commentary (Kalaignar)தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான், போர்களத்தில் உயிரைப் பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர்Hindi meaningप्राण-भय-रहित वीर जो, जब छिड़ता है युद्ध । साहस खो कर ना रुकें, नृप भी रोकें क्रुद्ध ॥Chapter 78: படைச் செருக்கு
Kural 779இழைத்த திகவாமைச் சாவாரை யாரேபிழைத்த தொறுக்கிற் பவர்Izhaiththadhu Ikavaamaich Chaavaarai Yaare Pizhaiththadhu Orukkir PavarEnglish meaning (G. U. Pope)Who would reproach with failure those who seal their oath with their death ?English verse translation (G. U. Pope)Who says they err, and visits them scorn, Who die and faithful guard the vow they've swornTamil commentary (Kalaignar)சபதம் செய்தவாறு களத்தில் சாவதற்குத் துணிந்த வீரனை யாராவது இழித்துப் பேச முடியுமா? முடியாதுHindi meaningप्रण रखने हित प्राण भी, छोड़ेंगे जो चण्ड । कौन उन्हें प्रण-भंग का, दे सकता है दण्ड़ ॥Chapter 78: படைச் செருக்கு
Kural 780புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடிரந்துகோட் டக்க துடைத்துPurandhaarkan Neermalkach Chaakirpin Saakkaatu Irandhukol Thakkadhu UtaiththuEnglish meaning (G. U. Pope)If (heroes) can so die as to fill with tears the eyes of their rulers, such a death deserves to be obtained even by beggingEnglish verse translation (G. U. Pope)If monarch's eyes o'erflow with tears for hero slain, Who would not beg such boon of glorious death to gainTamil commentary (Kalaignar)தன்னைக் காத்த தலைவனுடைய கண்களில் நீர் பெருகுமாறு வீரமரணம் அடைந்தால், அத்தகைய மரணத்தை யாசித்தாவது பெற்றுக் கொள்வதில் பெருமை உண்டுHindi meaningदृग भर आये भूप के, सुन जिसका देहांत । ग्रहण योग्य है माँग कर, उसका जैसा अंत ॥Chapter 78: படைச் செருக்கு