Kural 51மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்வளத்தக்காள் வாழ்க்கைத் துணைManaikdhakka Maanputaiyal Aakiththar Kontaan Valaththakkaal Vaazhkkaith ThunaiEnglish meaning (G. U. Pope)She who has the excellence of home virtues, and can expend within the means of her husband, is a help in the domestic stateEnglish verse translation (G. U. Pope)As doth the house beseem, she shows her wifely dignity; As doth her husband's wealth befit, she spends: help - meet is sheTamil commentary (Kalaignar)இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்Hindi meaningगृहिणी-गुण-गण प्राप्त कर, पुरुष-आय अनुसार । जो गृह-व्यय करती वही, सहधर्मिणी सुचार ॥Chapter 6: வாழ்க்கைத் துணைநலம்
Kural 52மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கைஎனைமாட்சித் தாயினும் இல்Manaimaatchi Illaalkan Illaayin Vaazhkkai Enaimaatchith Thaayinum IlEnglish meaning (G. U. Pope)If the wife be devoid of domestic excellence, whatever (other) greatness be possessed, the conjugal state, is nothingEnglish verse translation (G. U. Pope)If household excellence be wanting in the wife, Howe'er with splendour lived, all worthless is the lifeTamil commentary (Kalaignar)நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாதுHindi meaningगुण-गण गृहणी में न हो, गृह्य-कर्म के अर्थ । सुसंपन्न तो क्यों न हो, गृह-जीवन है व्यर्थ ॥Chapter 6: வாழ்க்கைத் துணைநலம்
Kural 53இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்இல்லவள் மாணாக் கடைIlladhen Illaval Maanpaanaal Ulladhen Illaval Maanaak Katai?English meaning (G. U. Pope)If his wife be eminent (in virtue), what does (that man) not possess ? If she be without excellence, what does (he) possess ?English verse translation (G. U. Pope)There is no lack within the house, where wife in worth excels, There is no luck within the house, where wife dishonoured dwellsTamil commentary (Kalaignar)நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும் அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காதுHindi meaningगृहिणी रही सुधर्मिणी, तो क्या रहा अभाव । गृहिणी नहीं सुधर्मिणी, किसका नहीं अभाव ॥Chapter 6: வாழ்க்கைத் துணைநலம்
Kural 54பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின்Pennin Perundhakka Yaavula Karpennum Thinmaiun Taakap PerinEnglish meaning (G. U. Pope)What is more excellent than a wife, if she possess the stability of chastity ?English verse translation (G. U. Pope)If woman might of chastity retain, What choicer treasure doth the world containTamil commentary (Kalaignar)கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?Hindi meaningस्त्री से बढ़ कर श्रेष्ठ ही, क्या है पाने योग्य । यदि हो पातिव्रत्य की, दृढ़ता उसमें योग्य ॥Chapter 6: வாழ்க்கைத் துணைநலம்
Kural 55தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழைTheyvam Thozhaaal Kozhunan Thozhudhezhuvaal Peyyenap Peyyum MazhaiEnglish meaning (G. U. Pope)If she, who does not worship God, but who rising worships her husband, say, "let it rain," it will rainEnglish verse translation (G. U. Pope)No God adoring, low she bends before her lord; Then rising, serves: the rain falls instant at her wordTamil commentary (Kalaignar)கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்Hindi meaningपूजे सती न देव को, पूज जगे निज कंत । उसके कहने पर ‘बरस’, बरसे मेघ तुरंत ॥Chapter 6: வாழ்க்கைத் துணைநலம்
Kural 56தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்றசொற்காத்துச் சோர்விலாள் பெண்Tharkaaththuth Tharkontaar Penith Thakaisaandra Sorkaaththuch Chorvilaal PenEnglish meaning (G. U. Pope)She is a wife who unweariedly guards herself, takes care of her husband, and preserves an unsullied fameEnglish verse translation (G. U. Pope)Who guards herself, for husband's comfort cares, her household's fame, In perfect wise with sleepless soul preserves, -give her a woman's nameTamil commentary (Kalaignar)கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்Hindi meaningरक्षा करे सतीत्व की, पोषण करती कांत । गृह का यश भी जो रखे, स्त्री है वह अश्रांत ॥Chapter 6: வாழ்க்கைத் துணைநலம்
Kural 57சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்நிறைகாக்கும் காப்பே தலைSiraikaakkum Kaappevan Seyyum Makalir Niraikaakkum Kaappe ThalaiEnglish meaning (G. U. Pope)What avails the guard of a prison ? The chief guard of a woman is her chastityEnglish verse translation (G. U. Pope)Of what avail is watch and ward? Honour's woman's safest guardTamil commentary (Kalaignar)தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்Hindi meaningपरकोटा पहरा दिया, इनसे क्या हो रक्ष । स्त्री हित पातिव्रत्य ही, होगा उत्तम रक्ष ॥Chapter 6: வாழ்க்கைத் துணைநலம்
Kural 58பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்புத்தேளிர் வாழும் உலகுPetraar Perinperuvar Pentir Perunjirappup Puththelir Vaazhum UlakuEnglish meaning (G. U. Pope)If women shew reverence to their husbands, they will obtain great excellence in the world where the gods flourishEnglish verse translation (G. U. Pope)If wife be wholly true to him who gained her as his bride, Great glory gains she in the world where gods bliss abideTamil commentary (Kalaignar)நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்Hindi meaningयदि पाती है नारियाँ, पति पूजा कर शान । तो उनका सुरधाम में, होता है बहुमान ॥Chapter 6: வாழ்க்கைத் துணைநலம்
Kural 59புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்ஏறுபோல் பீடு நடைPukazhpurindha Illilorkku Illai Ikazhvaarmun Erupol Peetu NataiEnglish meaning (G. U. Pope)The man whose wife seeks not the praise (of chastity) cannot walk with lion-like stately step, before those who revile themEnglish verse translation (G. U. Pope)Who have not spouses that in virtue's praise delight, They lion-like can never walk in scorner's sightTamil commentary (Kalaignar)புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்Hindi meaningजिसकी पत्नी को नहीं, घर के यश का मान । नहिं निन्दक के सामने, गति शार्दूल समान ॥Chapter 6: வாழ்க்கைத் துணைநலம்
Kural 60மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்நன்கலம் நன்மக்கட் பேறுMangalam Enpa Manaimaatchi Matru Adhan Nankalam Nanmakkat PeruEnglish meaning (G. U. Pope)The excellence of a wife is the good of her husband; and good children are the jewels of that goodnessEnglish verse translation (G. U. Pope)The house's 'blessing', men pronounce the house-wife excellent; The gain of blessed children is its goodly ornamentTamil commentary (Kalaignar)குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பதுHindi meaningगृह का जयमंगल कहें, गृहिणी की गुण-खान । उनका सद्भूषण कहें, पाना सत्सन्तान ॥Chapter 6: வாழ்க்கைத் துணைநலம்