Kural 1211காதலர் தூதொடு வந்த கனவினுக்கியாதுசெய் வேன்கொல் விருந்துKaadhalar Thoodhotu Vandha Kanavinukku Yaadhusey Venkol VirundhuEnglish meaning (G. U. Pope)Where with shall I feast the dream which has brought me my dear one's messenger ?English verse translation (G. U. Pope)It came and brought to me, that nightly vision rare, A message from my love,- what feast shall I prepareTamil commentary (Kalaignar)வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது?Hindi meaningप्रियतम का जो दूत बन, आया स्वप्नाकार । उसका मैं कैसे करूँ, युग्य अतिथि-सत्कार ॥Chapter 122: கனவுநிலை உரைத்தல்
Kural 1212கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க்குயலுண்மை சாற்றுவேன் மன்Kayalunkan Yaanirappath Thunjir Kalandhaarkku Uyalunmai Saatruven ManEnglish meaning (G. U. Pope)If my fish-like painted eyes should, at my begging, close in sleep, I could fully relate my sufferings to my lordEnglish verse translation (G. U. Pope)If my dark, carp-like eye will close in sleep, as I implore, The tale of my long-suffering life I'll tell my loved one o'erTamil commentary (Kalaignar)நான் வேண்டுவதற்கு இணங்கி என் மை எழுதிய கயல் விழிகள் உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன்Hindi meaningयदि सुन मेरी प्रार्थना, दृग हों निद्रावान । दुख सह बचने की कथा, प्रिय से कहूँ बखान ॥Chapter 122: கனவுநிலை உரைத்தல்
Kural 1213நனவினான் நல்கா தவரைக் கனவினால்காண்டலின் உண்டென் உயிர்Nanavinaal Nalkaa Thavaraik Kanavinaal Kaantalin Unten UyirEnglish meaning (G. U. Pope)My life lasts because in my dream I behold him who does not favour me in my waking hoursEnglish verse translation (G. U. Pope)Him, who in waking hour no kindness shows, In dreams I see; and so my lifetime goesTamil commentary (Kalaignar)நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறதுHindi meaningजाग्रत रहने पर कृपा, करते नहीं सुजान । दर्शन देते स्वप्न में, तब तो रखती प्राण ॥Chapter 122: கனவுநிலை உரைத்தல்
Kural 1214கனவினான் உண்டாகும் காமம் நனவினான்நல்காரை நாடித் தரற்குKanavinaan Untaakum Kaamam Nanavinaan Nalkaarai Naatith ThararkuEnglish meaning (G. U. Pope)There is pleasure in my dream, because in it I seek and obtain him who does not visit me in my wakefulnessEnglish verse translation (G. U. Pope)Some pleasure I enjoy when him who loves not me In waking hours, the vision searches out and makes me seeTamil commentary (Kalaignar)நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறதுHindi meaningजाग्रति में करते नहीं, नाथ कृपा कर योग । खोज स्वप्न ने ला दिया, सो उसमें सुख-भोग ॥Chapter 122: கனவுநிலை உரைத்தல்
Kural 1215நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்கண்ட பொழுதே இனிதுNanavinaal Kantadhooum Aange Kanavundhaan Kanta Pozhudhe InidhuEnglish meaning (G. U. Pope)I saw him in my waking hours, and then it was pleasant; I see him just now in my dream, and it is (equally) pleasantEnglish verse translation (G. U. Pope)As what I then beheld in waking hour was sweet, So pleasant dreams in hour of sleep my spirit greetTamil commentary (Kalaignar)காதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது!Hindi meaningआँखों में जब तक रहे, जाग्रति में सुख-भोग । सपने में भी सुख रहा, जब तक दर्शन-योग ॥Chapter 122: கனவுநிலை உரைத்தல்
Kural 1216நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற்காதலர் நீங்கலர் மன்Nanavena Ondrillai Aayin Kanavinaal Kaadhalar Neengalar ManEnglish meaning (G. U. Pope)Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from meEnglish verse translation (G. U. Pope)And if there were no waking hour, my love In dreams would never from my side removeTamil commentary (Kalaignar)நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமேHindi meaningयदि न रहे यह जागरण, तो मेरे प्रिय नाथ । जो आते हैं स्वप्न में, छोड़ न जावें साथ ॥Chapter 122: கனவுநிலை உரைத்தல்
Kural 1217நனவினான் நல்காக் கொடியார் கனவினான்என்னெம்மைப் பீழிப் பதுNanavinaal Nalkaak Kotiyaar Kanavanaal Enemmaip Peezhip PadhuEnglish meaning (G. U. Pope)The cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams?English verse translation (G. U. Pope)The cruel one, in waking hour, who all ungracious seems, Why should he thus torment my soul in nightly dreamsTamil commentary (Kalaignar)நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்?Hindi meaningकृपा न कर जागरण में, निष्ठुर रहे सुजन । पीड़ित करते किसलिये, मुझे स्वप्न में प्राण ॥Chapter 122: கனவுநிலை உரைத்தல்
Kural 1218துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்நெஞ்சத்தார் ஆவர் விரைந்துThunjungaal Tholmelar Aaki Vizhikkungaal Nenjaththar Aavar ViraindhuEnglish meaning (G. U. Pope)When I am asleep he rests on my shoulders, (but) when I awake he hastens into my soulEnglish verse translation (G. U. Pope)And when I sleep he holds my form embraced; And when I wake to fill my heart makes hasteTamil commentary (Kalaignar)தூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம் தந்தவர், விழித்தபோது எங்கும் போய் விடவில்லை; என் நெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டார்Hindi meaningगले लगाते नींद में, पर जब पडती जाग । तब दिल के अन्दर सुजन, झट जाते हैं भाग ॥Chapter 122: கனவுநிலை உரைத்தல்
Kural 1219நனவினான் நல்காரை நோவர் கனவினான்காதலர்க் காணா தவர்Nanavinaal Nalkaarai Novar Kanavinaal Kaadhalark Kaanaa ThavarEnglish meaning (G. U. Pope)They who have no dear ones to behold in their dreams blame him who visits me not in my waking hoursEnglish verse translation (G. U. Pope)In dreams who ne'er their lover's form perceive, For those in waking hours who show no love will grieveTamil commentary (Kalaignar)கனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர்Hindi meaningजाग्रति में अप्राप्त को, कोसेंगी वे वाम । जिनके प्रिय ने स्वप्न में, मिल न दिया आराम ॥Chapter 122: கனவுநிலை உரைத்தல்
Kural 1220நனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான்காணார்கொல் இவ்வூ ரவர்Nanavinaal Namneeththaar Enpar Kanavinaal Kaanaarkol Ivvoo RavarEnglish meaning (G. U. Pope)The women of this place say he has forsaken me in my wakefulness I think they have not seen him visit me in my dreamsEnglish verse translation (G. U. Pope)They say, that he in waking hours has left me lone; In dreams they surely see him not,- these people of the town;Tamil commentary (Kalaignar)என் காதலர் என்னைப் பிரிந்திருப்பதாக அவரைக் குற்றம் சாட்டுகிறார்களே, இந்த ஊரார், பிரிந்து சென்ற தமது காதலனைக் கனவில் காண்பது கிடையாதோ?Hindi meaningयों कहते प्रिय का मुझे, जाग्रति में नहिं योग । सपने में ना देखते, क्या इस पुर के लोग ॥Chapter 122: கனவுநிலை உரைத்தல்