Kural 1041இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்இன்மையே இன்னா ததுInmaiyin Innaadhadhu Yaadhenin Inmaiyin Inmaiye Innaa ThadhuEnglish meaning (G. U. Pope)There is nothing that afflicts (one) like povertyEnglish verse translation (G. U. Pope)You ask what sharper pain than poverty is known; Nothing pains more than poverty, save poverty aloneTamil commentary (Kalaignar)வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லைHindi meaningयदि पूछो दारिद्र्य सम, दुःखद कौन महान । तो दुःखद दारिद्र्य सम, दारिद्रता ही जान ॥Chapter 105: நல்குரவு
Kural 1042இன்மை எனவொரு பாவி மறுமையும்இம்மையும் இன்றி வரும்Inmai Enavoru Paavi Marumaiyum Immaiyum Indri VarumEnglish meaning (G. U. Pope)When cruel poverty comes on, it deprives one of both the present and future (bliss)English verse translation (G. U. Pope)Malefactor matchless! poverty destroys This world's and the next world's joysTamil commentary (Kalaignar)பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி என்பது கிடையாதுHindi meaningनिर्धनता की पापिनी, यदि रहती है साथ । लोक तथा परलोक से, धोना होगा हाथ ॥Chapter 105: நல்குரவு
Kural 1043தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாகநல்குர வென்னும் நசைTholvaravum Tholum Ketukkum Thokaiyaaka Nalkuravu Ennum NasaiEnglish meaning (G. U. Pope)Hankering poverty destroys at once the greatness of (one's) ancient descent and (the dignity of one's) speechEnglish verse translation (G. U. Pope)Importunate desire, which poverty men name, Destroys both old descent and goodly fameTamil commentary (Kalaignar)ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்Hindi meaningनिर्धनता के नाम से, जो है आशा-पाश । कुलीनता, यश का करे, एक साथ ही नाश ॥Chapter 105: நல்குரவு
Kural 1044இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்தசொற்பிறக்கும் சோர்வு தரும்Irpirandhaar Kanneyum Inmai Ilivandha Sorpirakkum Sorvu TharumEnglish meaning (G. U. Pope)Even in those of high birth, poverty will produce the fault of uttering mean wordsEnglish verse translation (G. U. Pope)From penury will spring, 'mid even those of noble race, Oblivion that gives birth to words that bring disgraceTamil commentary (Kalaignar)இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும்Hindi meaningनिर्धनता पैदा करे, कुलीन में भी ढील । जिसके वश वह कह उठे, हीन वचन अश्लील ॥Chapter 105: நல்குரவு
Kural 1045நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத்துன்பங்கள் சென்று படும்Nalkuravu Ennum Itumpaiyul Palkuraith Thunpangal Sendru PatumEnglish meaning (G. U. Pope)The misery of poverty brings in its train many (more) miseriesEnglish verse translation (G. U. Pope)From poverty, that grievous woe, Attendant sorrows plenteous growTamil commentary (Kalaignar)வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும்Hindi meaningनिर्धनता के रूप में, जो है दुख का हाल । उसमें होती है उपज, कई तरह की साल ॥Chapter 105: நல்குரவு
Kural 1046நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்சொற்பொருள் சோர்வு படும்Narporul Nankunarndhu Sollinum Nalkoorndhaar Sorporul Sorvu PatumEnglish meaning (G. U. Pope)The words of the poor are profitless, though they may be sound in thought and clear in expressionEnglish verse translation (G. U. Pope)Though deepest sense, well understood, the poor man's words convey, Their sense from memory of mankind will fade awayTamil commentary (Kalaignar)அரிய பல் நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும்Hindi meaningयद्यपि अनुसंधान कर, कहे तत्व का अर्थ । फिर भी प्रवचन दिन का, हो जाता है व्यर्थ ॥Chapter 105: நல்குரவு
Kural 1047அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்பிறன்போல நோக்கப் படும்Aranjaaraa Nalkuravu Eendradhaa Yaanum Piranpola Nokkap PatumEnglish meaning (G. U. Pope)He that is reduced to absolute poverty will be regarded as a stranger even by his own motherEnglish verse translation (G. U. Pope)From indigence devoid of virtue's grace, The mother e'en that bare, estranged, will turn her faceTamil commentary (Kalaignar)வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள்Hindi meaningजिस दरिद्र का धर्म से, कुछ भी न अभिप्राय । जननी से भी अन्य सम, वह तो देखा जाय ॥Chapter 105: நல்குரவு
Kural 1048இன்றும் வருவது கொல்லோ நெருநலும்கொன்றது போலும் நிரப்புIndrum Varuvadhu Kollo Nerunalum Kondradhu Polum NirappuEnglish meaning (G. U. Pope)Is the poverty that almost killed me yesterday, to meet me today too ?English verse translation (G. U. Pope)And will it come today as yesterday, The grief of want that eats my soul awayTamil commentary (Kalaignar)கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்Hindi meaningकंगाली जो कर चुकी, कल मेरा संहार । अयोगी क्या आज भी, करने उसी प्रकार ॥Chapter 105: நல்குரவு
Kural 1049நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்யாதொன்றும் கண்பா டரிதுNeruppinul Thunjalum Aakum Nirappinul Yaadhondrum Kanpaatu AridhuEnglish meaning (G. U. Pope)One may sleep in the midst of fire; but by no means in the midst of povertyEnglish verse translation (G. U. Pope)Amid the flames sleep may men's eyelids close, In poverty the eye knows no reposeTamil commentary (Kalaignar)நெருப்புக்குள் படுத்துக் தூங்குவதைகூட ஒரு மனிதனால் முடியும்; ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத ஒன்றாகும்Hindi meaningअन्तराल में आग के, सोना भी है साध्य । आँख झपकना भी ज़रा, दारिद में नहिं साध्य ॥Chapter 105: நல்குரவு
Kural 1050துப்புர வில்லார் துவரத் துறவாமைஉப்பிற்கும் காடிக்கும் கூற்றுThuppura Villaar Thuvarath Thuravaamai Uppirkum Kaatikkum KootruEnglish meaning (G. U. Pope)The destitute poor, who do not renounce their bodies, only consume their neighbour's salt and waterEnglish verse translation (G. U. Pope)Unless the destitute will utterly themselves deny, They cause their neighbour's salt and vinegar to dieTamil commentary (Kalaignar)ஒழுங்குமறையற்றதால் வறுமையுற்றோர், முழுமையாகத் தம்மைத் துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும்தான் கேடுHindi meaningभोग्य-हीन रह, दिन का, लेना नहिं सन्यास । माँड-नमक का यम बने, करने हित है नाश ॥Chapter 105: நல்குரவு