Kural 991எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்பண்புடைமை என்னும் வழக்குEnpadhaththaal Eydhal Elidhenpa Yaarmaattum Panputaimai Ennum VazhakkuEnglish meaning (G. U. Pope)If one is easy of access to all, it will be easy for one to obtain the virtue called goodnessEnglish verse translation (G. U. Pope)Who easy access give to every man, they say, Of kindly courtesy will learn with ease the wayTamil commentary (Kalaignar)யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதான வழியாக அமையும்Hindi meaningमिलनसार रहते अगर, सब लोगों को मान । पाना शिष्टाचार है, कहते हैं आसान ॥Chapter 100: பண்புடைமை
Kural 992அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்பண்புடைமை என்னும் வழக்குAnputaimai Aandra Kutippiraththal Ivvirantum Panputaimai Ennum VazhakkuEnglish meaning (G. U. Pope)Affectionateness and birth in a good family, these two constitute what is called a proper behaviour to allEnglish verse translation (G. U. Pope)Benevolence and high born dignity, These two are beaten paths of courtesyTamil commentary (Kalaignar)அன்புடையவராக இருப்பதும், உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பதும்தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்த நெறியாகும்Hindi meaningउत्तम कुल में जन्म औ’, प्रेम पूर्ण व्यवहार । दोनों शिष्टाचार के, हैं ही श्रेष्ठ प्रकार ॥Chapter 100: பண்புடைமை
Kural 993உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்கபண்பொத்தல் ஒப்பதாம் ஒப்புUruppoththal Makkaloppu Andraal Veruththakka Panpoththal Oppadhaam OppuEnglish meaning (G. U. Pope)Resemblance of bodies is no resemblance of souls; true resemblance is the resemblance of qualities that attractEnglish verse translation (G. U. Pope)Men are not one because their members seem alike to outward view; Similitude of kindred quality makes likeness trueTamil commentary (Kalaignar)நற்பண்பு இல்லாதவர்களை அவர்களின் உடல் உறுப்புகளை மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்து மக்கள் இனத்தில் சேர்த்துப் பேசுவது சரியல்ல; நற்பண்புகளால் ஒத்திருப்பவர்களே மக்கள் எனப்படுவர்Hindi meaningन हो देह के मेल से, श्रेष्ठ जनों का मेल । आत्माओं के योग्य तो, हैं संस्कृति का मेल ॥Chapter 100: பண்புடைமை
Kural 994நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்பண்புள ராட்டும் உலகுNayanotu Nandri Purindha Payanutaiyaar Panpupaa Raattum UlakuEnglish meaning (G. U. Pope)The world applauds the character of those whose usefulness results from their equity and charityEnglish verse translation (G. U. Pope)Of men of fruitful life, who kindly benefits dispense, The world unites to praise the 'noble excellence.'Tamil commentary (Kalaignar)நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப் பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும்Hindi meaningनीति धर्म को चाहते, जो करते उपकार । उनके शिष्ट स्वभाव को, सराहता संसार ॥Chapter 100: பண்புடைமை
Kural 995நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்பண்புள பாடறிவார் மாட்டுNakaiyullum Innaa Thikazhchchi Pakaiyullum Panpula Paatarivaar MaattuEnglish meaning (G. U. Pope)Reproach is painful to one even in sport; those (therefore) who know the nature of others exhibit (pleasing) qualities even when they are hatedEnglish verse translation (G. U. Pope)Contempt is evil though in sport They who man's nature know, E'en in their wrath, a courteous mind will showTamil commentary (Kalaignar)விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும் அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்புகெடாமல் நடந்து கொள்வார்கள்Hindi meaningहँसी खेल में भी नहीं, निंदा करना इष्ट । पर-स्वभाव ज्ञाता रहें, रिपुता में भी शिष्ट ॥Chapter 100: பண்புடைமை
Kural 996பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்மண்புக்கு மாய்வது மன்Panputaiyaarp Pattuntu Ulakam Adhuindrel Manpukku Maaivadhu ManEnglish meaning (G. U. Pope)The (way of the) world subsists by contact with the good; if not, it would bury itself in the earth and perishEnglish verse translation (G. U. Pope)The world abides; for 'worthy' men its weight sustain Were it not so, 'twould fall to dust againTamil commentary (Kalaignar)உலக நடைமுறைகள், பண்பாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டும் இல்லையேல் அந்த நடைமுறைகள் நாசமாகிவிடும்Hindi meaningशिष्टों के आधार पर, टिकता है संसार । उनके बिन तो वह मिले, मिट्टी में निर्धार ॥Chapter 100: பண்புடைமை
Kural 997அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்மக்கட்பண் பில்லா தவர்Arampolum Koormaiya Renum Marampolvar Makkatpanpu Illaa ThavarEnglish meaning (G. U. Pope)He who is destitute of (true) human qualities (only) resembles a tree, though he may possess the sharpness of a fileEnglish verse translation (G. U. Pope)Though sharp their wit as file, as blocks they must remain, Whose souls are void of 'courtesy humane'Tamil commentary (Kalaignar)அரம் போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும், மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்துக்கு ஒப்பானவரேயாவார்Hindi meaningयद्यपि हैं रेती सदृश, तीक्षण बुद्धि-निधान । मानव-संस्कृति के बिना, नर हैं वृक्ष समान ॥Chapter 100: பண்புடைமை
Kural 998நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்பண்பாற்றார் ஆதல் கடைNanpaatraar Aaki Nayamila Seyvaarkkum Panpaatraar Aadhal KataiEnglish meaning (G. U. Pope)It is wrong (for the wise) not to exhibit (good) qualities even towards those who bearing no friendship (for them) do only what is hatefulEnglish verse translation (G. U. Pope)Though men with all unfriendly acts and wrongs assail, 'Tis uttermost disgrace in 'courtesy' to failTamil commentary (Kalaignar)நட்புக்கு ஏற்றவராக இல்லாமல் தீமைகளையே செய்து கொண்டிருப்பவரிடம், நாம் பொறுமை காட்டிப் பண்புடையவராக நடந்து கொள்ளாவிட்டால் அது இழிவான செயலாகக் கருதப்படும்Hindi meaningमित्र न रह जो शत्रु हैं, उनसे भी व्यवहार । सभ्य पुरुष का नहिं किया, तो वह अधम विचार ॥Chapter 100: பண்புடைமை
Kural 999நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்பகலும்பாற் பட்டன் றிருள்Nakalvallar Allaarkku Maayiru Gnaalam Pakalumpaar Pattandru IrulEnglish meaning (G. U. Pope)To those who cannot rejoice, the wide world is buried darkness even in (broad) day lightEnglish verse translation (G. U. Pope)To him who knows not how to smile in kindly mirth, Darkness in daytime broods o'er all the vast and mighty earthTamil commentary (Kalaignar)நண்பர்களுடன் பழகி மகிழத் தெரியாதவர்களுக்கு உலகம் என்பது பகலில் கூட இருட்டாகத்தான் இருக்கும்Hindi meaningजो जन कर सकते नहीं, प्रसन्न मन व्यवहार । दिन में भी तम में पड़ा, है उनका संसार ॥Chapter 100: பண்புடைமை
Kural 1000பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்கலந்தீமை யால்திரிந் தற்றுPanpilaan Petra Perunjelvam Nanpaal Kalandheemai Yaaldhirin ThatruEnglish meaning (G. U. Pope)The great wealth obtained by one who has no goodness will perish like pure milk spoilt by theEnglish verse translation (G. U. Pope)Like sweet milk soured because in filthy vessel poured, Is ample wealth in churlish man's unopened coffers storedTamil commentary (Kalaignar)பாத்திரம் களிம்பு பிடித்திருந்தால், அதில் ஊற்றி வைக்கப்படும் பால் எப்படிக் கெட்டுவிடுமோ அதுபோலப் பண்பு இல்லாதவர்கள் பெற்ற செல்வமும் பயனற்றதாகி விடும்Hindi meaningजो है प्राप्त असभ्य को, धन-सम्पत्ति अमेय । कलश-दोष से फट गया, शुद्ध दूध सम ज्ञेय ॥Chapter 100: பண்புடைமை