Kural 641நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்யாநலத் துள்ளதூஉம் அன்றுNaanalam Ennum Nalanutaimai Annalam Yaanalaththu Ulladhooum AndruEnglish meaning (G. U. Pope)The possession of that goodness which is called the goodness of speech is (even to others) better than any other goodnessEnglish verse translation (G. U. Pope)A tongue that rightly speaks the right is greatest gain, It stands alone midst goodly things that men obtainTamil commentary (Kalaignar)சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும்Hindi meaningवाक्- शक्ति की संपदा, है मंत्री को श्रेष्ठ । उनके अन्तर्गत नहीं, जो गुण अन्य यथेष्ट ॥Chapter 65: சொல்வன்மை
Kural 642ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வுAakkamung Ketum Adhanaal Varudhalaal Kaaththompal Sollinkat SorvuEnglish meaning (G. U. Pope)Since (both) wealth and evil result from (their) speech, ministers should most carefully guard themselves against faultiness thereinEnglish verse translation (G. U. Pope)Since gain and loss in life on speech depend, From careless slip in speech thyself defendTamil commentary (Kalaignar)ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும்Hindi meaningअपनी वाणी ही रही, लाभ- हानि का मूल । इससे रहना सजग़ हो, न हो बोलते भूल ॥Chapter 65: சொல்வன்மை
Kural 643கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்வேட்ப மொழிவதாம் சொல்Kettaarp Pinikkum Thakaiyavaaik Kelaarum Vetpa Mozhivadhaam SolEnglish meaning (G. U. Pope)The (minister's) speech is that which seeks (to express) elements as bind his friends (to himself) and is so delivered as to make even his enemies desire (his friendship)English verse translation (G. U. Pope)'Tis speech that spell-bound holds the listening ear, While those who have not heard desire to hearTamil commentary (Kalaignar)கேட்போரைக் கவரும் தன்மையுடைதாகவும், கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக் கேட்கக் கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை எனப்படும்Hindi meaningजो सुनते वश में पडे, भाषण वही समर्थ । वे भी जो सुनते नहीं, चाहें गुण के अर्थ ॥Chapter 65: சொல்வன்மை
Kural 644திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்பொருளும் அதனினூஉங் கில்Thiranarindhu Solluka Sollai Aranum Porulum Adhaninooungu IlEnglish meaning (G. U. Pope)Understand the qualities (of your hearers) and (then) make your speech; for superior to it, there is neither virtue nor wealthEnglish verse translation (G. U. Pope)Speak words adapted well to various hearers' state; No higher virtue lives, no gain more surely greatTamil commentary (Kalaignar)காரணத்தைத் தெளிவாக அறிந்து ஒன்றைச் சொல்ல வேண்டும் அந்தச் சொல் வன்மையைப் போன்ற அறமும், உண்மைப் பொருளும் வேறெதுவும் இல்லைHindi meaningशक्ति समझ कर चाहिये, करना शब्द प्रयोग । इससे बढ़ कर है नहीं, धर्म अर्थ का योग ॥Chapter 65: சொல்வன்மை
Kural 645சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லைவெல்லுஞ்சொல் இன்மை அறிந்துSolluka Sollaip Piridhorsol Achchollai Vellunjol Inmai ArindhuEnglish meaning (G. U. Pope)Deliver your speech, after assuring yourself that no counter speech can defeat your ownEnglish verse translation (G. U. Pope)Speak out your speech, when once 'tis past dispute That none can utter speech that shall your speech refuteTamil commentary (Kalaignar)இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்Hindi meaningबात बताना जान यह, अन्य न कोई बात । ऐसी जो उस बात को, कर सकती है मात ॥Chapter 65: சொல்வன்மை
Kural 646வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்மாட்சியின் மாசற்றார் கோள்Vetpaththaanj Chollip Pirarsol Payankotal Maatchiyin Maasatraar KolEnglish meaning (G. U. Pope)It is the opinion of those who are free from defects in diplomacy that the minister should speak so as to make his hearers desire (to hear more) and grasp the meaning of what he hears himselfEnglish verse translation (G. U. Pope)Charming each hearer's ear, of others' words to seize the sense, Is method wise of men of spotless excellenceTamil commentary (Kalaignar)மற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துக்களைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும்Hindi meaningसारग्रहण पर-वचन का, स्वयं करे प्रिय बात । निर्मल गुणयुत सचिव में, है यह गुण विख्यात ॥Chapter 65: சொல்வன்மை
Kural 647சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனைஇகல்வெல்லல் யார்க்கும் அரிதுSolalvallan Sorvilan Anjaan Avanai Ikalvellal Yaarkkum AridhuEnglish meaning (G. U. Pope)It is impossible for any one to conquer him by intrique who possesses power of speech, and is neither faulty nor timidEnglish verse translation (G. U. Pope)Mighty in word, of unforgetful mind, of fearless speech, 'Tis hard for hostile power such man to overreachTamil commentary (Kalaignar)சொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும், அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாதுHindi meaningभाषण-पटु, निर्भय तथा, रहता जो अश्रान्त । उसपर जय प्रतिवाद में, पाना कठिन नितान्त ॥Chapter 65: சொல்வன்மை
Kural 648விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிதுசொல்லுதல் வல்லார்ப் பெறின்Viraindhu Thozhilketkum Gnaalam Nirandhinidhu Solludhal Vallaarp PerinEnglish meaning (G. U. Pope)If there be those who can speak on various subjects in their proper order and in a pleasing manner, the world would readily accept themEnglish verse translation (G. U. Pope)Swiftly the listening world will gather round, When men of mighty speech the weighty theme propoundTamil commentary (Kalaignar)வகைப்படுத்தியும், சுவையாகவும் கருத்துக்களைச் சொல்லும் வல்லமையுடையோர் சுட்டிக்காட்டும் பணியை, உலகத்தார் உடனடியாக நிறைவேற்ற முனைவார்கள்Hindi meaningभाषण- पटु जो ढंग से, करता मीठी बात । यदि पाये तो जगत झट, माने उसकी बात ॥Chapter 65: சொல்வன்மை
Kural 649பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்றசிலசொல்லல் தேற்றா தவர்Palasollak Kaamuruvar Mandramaa Satra Silasollal Thetraa ThavarEnglish meaning (G. U. Pope)They will desire to utter many words, who do not know how to speak a few faultless onesEnglish verse translation (G. U. Pope)Who have not skill ten faultless words to utter plain, Their tongues will itch with thousand words man's ears to painTamil commentary (Kalaignar)குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள்Hindi meaningथोडे बचन दोष रहित, कहने में असमर्थ । निश्चय वे हैं चाहते, बहुत बोलना व्यर्थ ॥Chapter 65: சொல்வன்மை
Kural 650இணரூழ்த்து நாறா மலரனையர் கற்றதுணர விரிந்துரையா தார்Inaruzhththum Naaraa Malaranaiyar Katradhu Unara Viriththuraiyaa ThaarEnglish meaning (G. U. Pope)Those who are unable to set forth their acquirements (before others) are like flowers blossoming in a cluster and yet without fragranceEnglish verse translation (G. U. Pope)Like scentless flower in blooming garland bound Are men who can't their lore acquired to other's ears expoundTamil commentary (Kalaignar)கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்Hindi meaningपठित ग्रन्थ व्याख्या सहित, प्रवचन में असमर्थ । खिला किन्तु खुशबू रहित, पुष्य-गुच्छ सम व्यर्थ ॥Chapter 65: சொல்வன்மை