Kural 291வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந்தீமை யிலாத சொலல்Vaaimai Enappatuvadhu Yaadhenin Yaadhondrum Theemai Ilaadha SolalEnglish meaning (G. U. Pope)Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others)English verse translation (G. U. Pope)You ask, in lips of men what 'truth' may be; 'Tis speech from every taint of evil freeTamil commentary (Kalaignar)பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்Hindi meaningपरिभाषा है सत्य की, वचन विनिर्गत हानि । सत्य-कथन से अल्प भी न हो किसी को ग्लानि ॥Chapter 30: வாய்மை
Kural 292பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்தநன்மை பயக்கு மெனின்Poimaiyum Vaaimai Yitaththa Puraidheerndha Nanmai Payakkum EninEnglish meaning (G. U. Pope)Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from faultEnglish verse translation (G. U. Pope)Falsehood may take the place of truthful word, If blessing, free from fault, it can affordTamil commentary (Kalaignar)குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்Hindi meaningमिथ्या-भाषण यदि करे, दोषरहित कल्याण । तो यह मिथ्या-कथन भी, मानो सत्य समान ॥Chapter 30: வாய்மை
Kural 293தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்தன்நெஞ்சே தன்னைச் சுடும்Thannenj Charivadhu Poiyarka Poiththapin Thannenje Thannaich ChutumEnglish meaning (G. U. Pope)Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt)English verse translation (G. U. Pope)Speak not a word which false thy own heart knows Self-kindled fire within the false one's spirit glowsTamil commentary (Kalaignar)மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்Hindi meaningनिज मन समझे जब स्वयं, झूठ न बोलें आप । बोलें तो फिर आप को, निज मन दे संताप ॥Chapter 30: வாய்மை
Kural 294உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்உள்ளத்து ளெல்லாம் உளன்Ullaththaar Poiyaa Thozhukin Ulakaththaar Ullaththu Lellaam UlanEnglish meaning (G. U. Pope)He who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all menEnglish verse translation (G. U. Pope)True to his inmost soul who lives,- enshrined He lives in souls of all mankindTamil commentary (Kalaignar)மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்Hindi meaningमन से सत्याचरण का, जो करता अभ्यास । जग के सब के हृदय में, करता है वह वास ॥Chapter 30: வாய்மை
Kural 295மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடுதானஞ்செய் வாரின் தலைManaththotu Vaaimai Mozhiyin Thavaththotu Thaananjey Vaarin ThalaiEnglish meaning (G. U. Pope)He, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austeritiesEnglish verse translation (G. U. Pope)Greater is he who speaks the truth with full consenting mind Than men whose lives have penitence and charity combinedTamil commentary (Kalaignar)உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்Hindi meaningदान-पुण्य तप-कर्म भी, करते हैं जो लोग । उनसे बढ़ हैं, हृदय से, सच बोलें जो लोग ॥Chapter 30: வாய்மை
Kural 296பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமைஎல்லா அறமுந் தரும்Poiyaamai Anna Pukazhillai Eyyaamai Ellaa Aramun TharumEnglish meaning (G. U. Pope)There is no praise like the praise of never uttering a falsehood: without causing any suffering, it will lead to every virtueEnglish verse translation (G. U. Pope)No praise like that of words from falsehood free; This every virtue yields spontaneouslyTamil commentary (Kalaignar)பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்Hindi meaningमिथ्या-भाषण त्याग सम, रहा न कीर्ति-विकास । उससे सारा धर्म-फल, पाये बिना प्रयास ॥Chapter 30: வாய்மை
Kural 297பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்றுPoiyaamai Poiyaamai Aatrin Arampira Seyyaamai Seyyaamai NandruEnglish meaning (G. U. Pope)If a man has the power to abstain from falsehood, it will be well with him, even though he practise no other virtueEnglish verse translation (G. U. Pope)If all your life be utter truth, the truth alone, 'Tis well, though other virtuous acts be left undoneTamil commentary (Kalaignar)செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும்Hindi meaningसत्य-धर्म का आचरण, सत्य-धर्म ही मान । अन्य धर्म सब त्यागना, अच्छा ही है जान ॥Chapter 30: வாய்மை
Kural 298புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மைவாய்மையால் காணப் படும்Puraldhooimai Neeraan Amaiyum Akandhooimai Vaaimaiyaal Kaanap PatumEnglish meaning (G. U. Pope)Purity of body is produced by water and purity of mind by truthfulnessEnglish verse translation (G. U. Pope)Outward purity the water will bestow; Inward purity from truth alone will flowTamil commentary (Kalaignar)நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்Hindi meaningबाह्य-शुद्धता देह को, देता ही है तोय । अन्तः करण-विशुद्धता, प्रकट सत्य से जोंय ॥Chapter 30: வாய்மை
Kural 299எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்பொய்யா விளக்கே விளக்குEllaa Vilakkum Vilakkalla Saandrorkkup Poiyaa Vilakke VilakkuEnglish meaning (G. U. Pope)All lamps of nature are not lamps; the lamp of truth is the lamp of the wiseEnglish verse translation (G. U. Pope)Every lamp is not a lamp in wise men's sight; That's the lamp with truth's pure radiance brightTamil commentary (Kalaignar)புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்Hindi meaningदीपक सब दीपक नहीं, जिनसे हो तम-नाश । सत्य-दीप ही दीप है, पावें साधु प्रकाश ॥Chapter 30: வாய்மை
Kural 300யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும்வாய்மையின் நல்ல பிறYaameyyaak Kantavatrul Illai Enaiththondrum Vaaimaiyin Nalla PiraEnglish meaning (G. U. Pope)Amidst all that we have seen (described) as real (excellence), there is nothing so good as truthfulnessEnglish verse translation (G. U. Pope)Of all good things we've scanned with studious care, There's nought that can with truthfulness compareTamil commentary (Kalaignar)வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்Hindi meaningहमने अनुसन्धान से, जितने पाये तत्व । उनमें कोई सत्य सम, पाता नहीं महत्व ॥Chapter 30: வாய்மை