Kural 111தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்பாற்பட் டொழுகப் பெறின்Thakudhi Enavondru Nandre Pakudhiyaal Paarpattu Ozhukap PerinEnglish meaning (G. U. Pope)That equity which consists in acting with equal regard to each of (the three) divisions of men [enemies, strangers and friends] is a pre-eminent virtueEnglish verse translation (G. U. Pope)If justice, failing not, its quality maintain, Giving to each his due, -'tis man's one highest gainTamil commentary (Kalaignar)பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்Hindi meaningमध्यस्थता यथेष्ट है, यदि हो यह संस्कार । शत्रु मित्र औ’ अन्य से, न्यायोचित व्यवहार ॥Chapter 12: நடுவு நிலைமை
Kural 112செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றிஎச்சத்திற் கேமாப் புடைத்துSeppam Utaiyavan Aakkanj Chidhaivindri Echchaththir Kemaappu UtaiththuEnglish meaning (G. U. Pope)The wealth of the man of rectitude will not perish, but will bring happiness also to his posterityEnglish verse translation (G. U. Pope)The just man's wealth unwasting shall endure, And to his race a lasting joy ensureTamil commentary (Kalaignar)நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்Hindi meaningन्यायनिष्ठ की संपदा, बिना हुए क्षयशील । वंश वंश का वह रहे, अवलंबन स्थितिशील ॥Chapter 12: நடுவு நிலைமை
Kural 113நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தைஅன்றே யொழிய விடல்Nandre Tharinum Natuvikandhaam Aakkaththai Andre Yozhiya VitalEnglish meaning (G. U. Pope)Forsake in the very moment (of acquisition) that gain which, though it should bring advantage, is without equityEnglish verse translation (G. U. Pope)Though only good it seem to give, yet gain By wrong acquired, not e'en one day retainTamil commentary (Kalaignar)நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்Hindi meaningतजने से निष्पक्षता, जो धन मिले अनन्त । भला, भले ही, वह करे तजना उसे तुरन्त ॥Chapter 12: நடுவு நிலைமை
Kural 114தக்கார் தகவிலர் என்ப தவரவர்எச்சத்தாற் காணப் படும்Thakkaar Thakavilar Enpadhu Avaravar Echchaththaar Kaanap PatumEnglish meaning (G. U. Pope)The worthy and unworthy may be known by the existence or otherwise of good offspringsEnglish verse translation (G. U. Pope)Who just or unjust lived shall soon appear: By each one's offspring shall the truth be clearTamil commentary (Kalaignar)ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்Hindi meaningकोई ईमान्दार है, अथवा बेईमान । उन उनके अवशेष से, होती यह पहचान ॥Chapter 12: நடுவு நிலைமை
Kural 115கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்கோடாமை சான்றோர்க் கணிKetum Perukkamum Illalla Nenjaththuk Kotaamai Saandrork KaniEnglish meaning (G. U. Pope)Loss and gain come not without cause; it is the ornament of the wise to preserve evenness of mind (under both)English verse translation (G. U. Pope)The gain and loss in life are not mere accident; Just mind inflexible is sages' ornamentTamil commentary (Kalaignar)ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்Hindi meaningसंपन्नता विपन्नता, इनका है न अभाव । सज्जन का भूषण रहा, न्यायनिष्ठता भाव ॥Chapter 12: நடுவு நிலைமை
Kural 116கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்நடுவொரீஇ அல்ல செயின்Ketuvalyaan Enpadhu Arikadhan Nenjam Natuvoreei Alla SeyinEnglish meaning (G. U. Pope)Let him whose mind departing from equity commits sin well consider thus within himself, "I shall perish."English verse translation (G. U. Pope)If, right deserting, heart to evil turn, Let man impending ruin's sign discernTamil commentary (Kalaignar)நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்Hindi meaningसर्वनाश मेरा हुआ, यों जाने निर्धार । चूक न्याय-पथ यदि हुआ, मन में बुरा विचार ॥Chapter 12: நடுவு நிலைமை
Kural 117கெடுவாக வையா துலகம் நடுவாகநன்றிக்கண் தங்கியான் தாழ்வுKetuvaaka Vaiyaadhu Ulakam Natuvaaka Nandrikkan Thangiyaan ThaazhvuEnglish meaning (G. U. Pope)The great will not regard as poverty the low estate of that man who dwells in the virtue of equityEnglish verse translation (G. U. Pope)The man who justly lives, tenacious of the right, In low estate is never low to wise man's sightTamil commentary (Kalaignar)நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாதுHindi meaningन्यायवान धर्मिष्ठ की, निर्धनता अवलोक । मानेगा नहिं हीनता, बुद्धिमान का लोक ॥Chapter 12: நடுவு நிலைமை
Kural 118சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்கோடாமை சான்றோர்க் கணிSamanseydhu Seerdhookkung Kolpol Amaindhorupaal Kotaamai Saandrork KaniEnglish meaning (G. U. Pope)To incline to neither side, but to rest impartial as the even-fixed scale is the ornament of the wiseEnglish verse translation (G. U. Pope)To stand, like balance-rod that level hangs and rightly weighs, With calm unbiassed equity of soul, is sages' praiseTamil commentary (Kalaignar)ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தாரசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்Hindi meaningसम रेखा पर हो तुला, ज्यों तोले सामान । भूषण महानुभाव का, पक्ष न लेना मान ॥Chapter 12: நடுவு நிலைமை
Kural 119சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையாஉட்கோட்டம் இன்மை பெறின்Sorkottam Illadhu Seppam Orudhalaiyaa Utkottam Inmai PerinEnglish meaning (G. U. Pope)Freedom from obliquity of speech is rectitude, if there be (corresponding) freedom from bias of mindEnglish verse translation (G. U. Pope)Inflexibility in word is righteousness, If men inflexibility of soul possessTamil commentary (Kalaignar)நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும் அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமைHindi meaningकहना सीधा वचन है, मध्यस्थता ज़रूर । दृढ़ता से यदि हो गयी, चित्त-वक्रता दूर ॥Chapter 12: நடுவு நிலைமை
Kural 120வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்பிறவும் தமபோல் செயின்Vaanikam Seyvaarkku Vaanikam Penip Piravum Thamapol SeyinEnglish meaning (G. U. Pope)The true merchandize of merchants is to guard and do by the things of others as they do by their ownEnglish verse translation (G. U. Pope)As thriving trader is the trader known, Who guards another's interests as his ownTamil commentary (Kalaignar)பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்Hindi meaningयदि रखते पर माल को, अपना माल समान । वणिक करे वाणीज्य तो, वही सही तू जान ॥Chapter 12: நடுவு நிலைமை