Kural 1141அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்பலரறியார் பாக்கியத் தால்Alarezha Aaruyir Nairkum Adhanaip Palarariyaar Paakkiyath ThaalEnglish meaning (G. U. Pope)My precious life is saved by the raise of rumour, and this, to my good luck no others are aware ofEnglish verse translation (G. U. Pope)By this same rumour's rise, my precious life stands fast; Good fortune grant the many know this notTamil commentary (Kalaignar)எம் காதலைப் பற்றிப் பழிதூற்றிப் பேசுவதால் அதுவே எம் காதல் கைகூட வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் எம் உயிர் போகாமல் இருக்கிறது என்பதை ஊரார் அறிய மாட்டார்கள்Hindi meaningप्रचलन हुआ प्रवाद का, सो टिकता प्रिय प्राण । इसका मेरे भाग्य से, लोगों को नहिं ज्ञान ॥Chapter 115: அலர் அறிவுறுத்தல்
Kural 1142மலரன்ன கண்ணாள் அருமை அறியாதலரெமக் கீந்ததிவ் வூர்Malaranna Kannaal Arumai Ariyaadhu Alaremakku Eendhadhiv VoorEnglish meaning (G. U. Pope)Not knowing the value of her whose eyes are like flowers this town has got up a rumour about meEnglish verse translation (G. U. Pope)The village hath to us this rumour giv'n, that makes her mine; Unweeting all the rareness of the maid with flower-like eyneTamil commentary (Kalaignar)அந்த மலர்விழியாளின் மாண்பினை உணராமல் எம்மிடையே காதல் என்று இவ்வூரார் பழித்துரைத்தது மறைமுக உதவியாகவே எமக்கு அமைந்ததுHindi meaningसुमन-नयन-युत बाल की, दुर्लभता नहिं जान । इस पुर ने अफवाह तो, की है मुझे प्रदान ॥Chapter 115: அலர் அறிவுறுத்தல்
Kural 1143உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்பெறாஅது பெற்றன்ன நீர்த்துUraaadho Oorarindha Kelavai Adhanaip Peraaadhu Petranna NeerththuEnglish meaning (G. U. Pope)Will I not get a rumour that is known to the (whole) town ? For what I have not got is as if I had got it (already)English verse translation (G. U. Pope)The rumour spread within the town, is it not gain to me? It is as though that were obtained that may not beTamil commentary (Kalaignar)எமது காதலைப்பற்றி ஊரறியப் பேச்சு எழாதா? அந்தப் பேச்சு, இன்னும் எமக்குக் கிட்டாத காதல் கிட்டியது போன்று இன்பத்தைத் தரக்கூடியதாயிற்றே!Hindi meaningक्या मेरे लायक नहीं, पुरजन-ज्ञात प्रवाह । प्राप्त किये बिन मिलन तो, हुई प्राप्त सी बात ॥Chapter 115: அலர் அறிவுறுத்தல்
Kural 1144கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல்தவ்வென்னும் தன்மை இழந்துKavvaiyaal Kavvidhu Kaamam Adhuvindrel Thavvennum Thanmai IzhandhuEnglish meaning (G. U. Pope)Rumour increases the violence of my passion; without it it would grow weak and waste awayEnglish verse translation (G. U. Pope)The rumour rising makes my love to rise; My love would lose its power and languish otherwiseTamil commentary (Kalaignar)ஊரார் அலர் தூற்றுவதால் எம் காதல் வளர்கிறது; இல்லையேல் இக்காதல்கொடி வளமிழந்து வாடிப்போய் விடும்Hindi meaningपुरजन के अपवाद से, बढ़ जाता है काम । घट जायेगा अन्यथा, खो कर निज गुण-नाम ॥Chapter 115: அலர் அறிவுறுத்தல்
Kural 1145களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்வெளிப்படுந் தோறும் இனிதுKaliththorum Kalluntal Vettatraal Kaamam Velippatun Thorum InidhuEnglish meaning (G. U. Pope)As drinking liquor is delightful (to one) whenever one is in mirth, so is lust delightful to me whenever it is the subject of rumourEnglish verse translation (G. U. Pope)The more man drinks, the more he ever drunk would be; The more my love's revealed, the sweeter 'tis to meTamil commentary (Kalaignar)காதல் வெளிப்பட வெளிப்பட இனிமையாக இருப்பது கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளையே விரும்புவது போன்றதாகும்Hindi meaningहोते होते मस्त ज्यों, प्रिय लगता मधु-पान । हो हो प्रकट प्रवाद से, मधुर काम की बान ॥Chapter 115: அலர் அறிவுறுத்தல்
Kural 1146கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்திங்களைப் பாம்புகொண் டற்றுKantadhu Mannum Orunaal Alarmannum Thingalaip Paampukon TatruEnglish meaning (G. U. Pope)It was but a single day that I looked on (my lover); but the rumour thereof has spread like the seizure of the moon by the serpentEnglish verse translation (G. U. Pope)I saw him but one single day: rumour spreads soon As darkness, when the dragon seizes on the moonTamil commentary (Kalaignar)காதலர் சந்தித்துக் கொண்டது ஒருநாள்தான் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் ``கிரகணம்'' எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர் முழுவதும் அலராகப் பரவியதுHindi meaningप्रिय से केवल एक दिन, हुई मिलन की बात । लेकिन चन्द्रग्रहण सम, व्यापक हुआ प्रवाद ॥Chapter 115: அலர் அறிவுறுத்தல்
Kural 1147ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்நீராக நீளுமிந் நோய்Ooravar Kelavai Eruvaaka Annaisol Neeraaka Neelumin NoiEnglish meaning (G. U. Pope)This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my motherEnglish verse translation (G. U. Pope)My anguish grows apace: the town's report Manures it; my mother's word doth water itTamil commentary (Kalaignar)ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாதுHindi meaningपुरजन-निंदा खाद है, माँ का कटु वच नीर । इनसे पोषित रोग यह, बढ़ता रहा अधीर ॥Chapter 115: அலர் அறிவுறுத்தல்
Kural 1148நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்காமம் நுதுப்பேம் எனல்Neyyaal Erinudhuppem Endratraal Kelavaiyaal Kaamam Nudhuppem EnalEnglish meaning (G. U. Pope)To say that one could extinguish passion by rumour is like extinguishing fire with gheeEnglish verse translation (G. U. Pope)With butter-oil extinguish fire! 'Twill prove Harder by scandal to extinguish loveTamil commentary (Kalaignar)ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது, எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்வதைப் போன்றதாகும்Hindi meaningकाम-शमन की सोचना, कर अपवाद प्रचार । अग्नि-शमन घी डाल कर, करना सदृश विचार ॥Chapter 115: அலர் அறிவுறுத்தல்
Kural 1149அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம் பென்றார்பலர்நாண நீத்தக் கடைAlarnaana Olvadho Anjalompu Endraar Palarnaana Neeththak KataiEnglish meaning (G. U. Pope)When the departure of him who said "fear not" has put me to shame before others, why need I be ashamed of scandalEnglish verse translation (G. U. Pope)When he who said 'Fear not!' hath left me blamed, While many shrink, can I from rumour hide ashamedTamil commentary (Kalaignar)உன்னை விட்டுப் பிரியேன் அஞ்ச வேண்டாம் என்று உறுதியளித்தவர் பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும் போது நான் மட்டும் ஊரார் தூற்றும் அலருக்காக நாண முடியுமா?Hindi meaningअपवादें से क्यों डरूँ, जब कर अभय प्रदान । सब को लज्जित कर गये, छोड़ मुझे प्रिय प्राण ॥Chapter 115: அலர் அறிவுறுத்தல்
Kural 1150தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்கௌவை எடுக்குமிவ் வூர்Thaamventin Nalkuvar Kaadhalar Yaamventum Kelavai Etukkumiv VoorEnglish meaning (G. U. Pope)The rumour I desire is raised by the town (itself); and my lover would if desired consent (to my following him)English verse translation (G. U. Pope)If we desire, who loves will grant what we require; This town sends forth the rumour we desireTamil commentary (Kalaignar)யாம் விரும்புகின்றவாறு ஊரார் அலர் தூற்றுகின்றனர்; காதலரும் விரும்பினால் அதை ஒப்புக் கொள்வார்Hindi meaningनिज वांछित अपवाद का, पुर कर रहा प्रचार । चाहूँ तो प्रिय नाथ भी, कर देंगे उपकार ॥Chapter 115: அலர் அறிவுறுத்தல்