Kural 101செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிதுSeyyaamal Seydha Udhavikku Vaiyakamum Vaanakamum Aatral AridhuEnglish meaning (G. U. Pope)(The gift of) heaven and earth is not an equivalent for a benefit which is conferred where none had been receivedEnglish verse translation (G. U. Pope)Assistance given by those who ne'er received our aid, Is debt by gift of heaven and earth but poorly paidTamil commentary (Kalaignar)``வாராது வந்த மாமணி'' என்பதுபோல், ``செய்யாமற் செய்த உதவி'' என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டாHindi meaningउपकृत हुए बिना करे, यदि कोइ उपकार । दे कर भू सुर-लोक भी, मुक्त न हो आभार ॥Chapter 11: செய்ந்நன்றியறிதல்
Kural 102காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிதுKaalaththi Naarseydha Nandri Siridheninum Gnaalaththin Maanap PeridhuEnglish meaning (G. U. Pope)A favour conferred in the time of need, though it be small (in itself), is (in value) much larger than the worldEnglish verse translation (G. U. Pope)A timely benefit, -though thing of little worth, The gift itself, -in excellence transcends the earthTamil commentary (Kalaignar)தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்Hindi meaningअति संकट के समय पर, किया गया उपकार । भू से अधिक महान है, यद्यपि अल्पाकार ॥Chapter 11: செய்ந்நன்றியறிதல்
Kural 103பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்நன்மை கடலின் பெரிதுPayandhookkaar Seydha Udhavi Nayandhookkin Nanmai Katalin PeridhuEnglish meaning (G. U. Pope)If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the seaEnglish verse translation (G. U. Pope)Kindness shown by those who weigh not what the return may be: When you ponder right its merit, 'Tis vaster than the seaTamil commentary (Kalaignar)என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிதுHindi meaningस्वार्थरहित कृत मदद का, यदि गुण आंका जाय । उदधि-बड़ाई से बड़ा, वह गुण माना जाय ॥Chapter 11: செய்ந்நன்றியறிதல்
Kural 104தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்கொள்வர் பயன்தெரி வார்Thinaiththunai Nandri Seyinum Panaiththunaiyaak Kolvar Payandheri VaarEnglish meaning (G. U. Pope)Though the benefit conferred be as small as a millet seed, those who know its advantage will consider it as large as a palmyra fruitEnglish verse translation (G. U. Pope)Each benefit to those of actions' fruit who rightly deem, Though small as millet-seed, as palm-tree vast will seemTamil commentary (Kalaignar)ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்Hindi meaningउपकृति तिल भर ही हुई, तो भी उसे सुजान । मानें ऊँचे ताड़ सम, सुफल इसी में जान ॥Chapter 11: செய்ந்நன்றியறிதல்
Kural 105உதவி வரைத்தன் றுதவி உதவிசெயப்பட்டார் சால்பின் வரைத்துUdhavi Varaiththandru Udhavi Udhavi Seyappattaar Saalpin VaraiththuEnglish meaning (G. U. Pope)The benefit itself is not the measure of the benefit; the worth of those who have received it is its measureEnglish verse translation (G. U. Pope)The kindly aid's extent is of its worth no measure true; Its worth is as the worth of him to whom the act you doTamil commentary (Kalaignar)உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்Hindi meaningसीमित नहिं, उपकार तक, प्रत्युपकार- प्रमाण । जितनी उपकृत-योग्यता, उतना उसका मान ॥Chapter 11: செய்ந்நன்றியறிதல்
Kural 106மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்கதுன்பத்துள் துப்பாயார் நட்புMaravarka Maasatraar Kenmai Thuravarka Thunpaththul Thuppaayaar NatpuEnglish meaning (G. U. Pope)Forsake not the friendship of those who have been your staff in adversity Forget not be benevolence of the blamelessEnglish verse translation (G. U. Pope)Kindness of men of stainless soul remember evermore Forsake thou never friends who were thy stay in sorrow soreTamil commentary (Kalaignar)மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாதுHindi meaningनिर्दोषों की मित्रता, कभी न जाना भूल । आपद-बंधु स्नेह को, कभी न तजना भूल ॥Chapter 11: செய்ந்நன்றியறிதல்
Kural 107எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்விழுமந் துடைத்தவர் நட்புEzhumai Ezhupirappum Ulluvar Thangan Vizhuman Thutaiththavar NatpuEnglish meaning (G. U. Pope)(The wise) will remember throughout their seven-fold births the love of those who have wiped away their afflictionEnglish verse translation (G. U. Pope)Through all seven worlds, in seven-fold birth, Remains in mem'ry of the wise Friendship of those who wiped on earth, The tears of sorrow from their eyesTamil commentary (Kalaignar)ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்வதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாதுHindi meaningजिसने दुःख मिटा दिया, उसका स्नेह स्वभाव । सात जन्म तक भी स्मरण, करते महानुभाव ॥Chapter 11: செய்ந்நன்றியறிதல்
Kural 108நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுஅன்றே மறப்பது நன்றுNandri Marappadhu Nandrandru Nandralladhu Andre Marappadhu NandruEnglish meaning (G. U. Pope)It is not good to forget a benefit; it is good to forget an injury even in the very moment (in which it is inflicted)English verse translation (G. U. Pope)'Tis never good to let the thought of good things done thee pass away; Of things not good, 'tis good to rid thy memory that very dayTamil commentary (Kalaignar)ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லதுHindi meaningभला नहीं है भूलना, जो भी हो उपकार । भला यही झट भूलना, कोई भी अपकार ॥Chapter 11: செய்ந்நன்றியறிதல்
Kural 109கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்தஒன்றுநன் றுள்ளக் கெடும்Kondranna Innaa Seyinum Avarseydha Ondrunandru Ullak KetumEnglish meaning (G. U. Pope)Though one inflict an injury great as murder, it will perish before the thought of one benefit (formerly) conferredEnglish verse translation (G. U. Pope)Effaced straightway is deadliest injury, By thought of one kind act in days gone byTamil commentary (Kalaignar)ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானதுHindi meaningहत्या सम कोई करे, अगर बड़ी कुछ हानि । उसकी इक उपकार-स्मृति, करे हानि की हानि ॥Chapter 11: செய்ந்நன்றியறிதல்
Kural 110எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்குEnnandri Kondraarkkum Uyvuntaam Uyvillai Seynnandri Kondra MakarkuEnglish meaning (G. U. Pope)He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefitEnglish verse translation (G. U. Pope)Who every good have killed, may yet destruction flee; Who 'benefit' has killed, that man shall ne'er 'scape freeTamil commentary (Kalaignar)எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லைHindi meaningजो भी पातक नर करें, संभव है उद्धार । पर है नहीं कृतघ्न का, संभव ही निस्तार ॥Chapter 11: செய்ந்நன்றியறிதல்