Kural 891ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்போற்றலுள் எல்லாம் தலைAatruvaar Aatral Ikazhaamai Potruvaar Potralul Ellaam ThalaiEnglish meaning (G. U. Pope)Not to disregard the power of those who can carry out (their wishes) is more important than all the watchfulness of those who guard (themselves against evil)English verse translation (G. U. Pope)The chiefest care of those who guard themselves from ill, Is not to slight the powers of those who work their mighty willTamil commentary (Kalaignar)ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது இருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச் சிறந்த காவலாக அமையும்Hindi meaningसक्षम की करना नहीं, क्षमता का अपमान । रक्षा हित जो कार्य हैं, उनमें यही महान ॥Chapter 90: பெரியாரைப் பிழையாமை
Kural 892பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்பேரா இடும்பை தரும்Periyaaraip Penaadhu Ozhukir Periyaaraal Peraa Itumpai TharumEnglish meaning (G. U. Pope)To behave without respect for the great (rulers) will make them do (us) irremediable evilsEnglish verse translation (G. U. Pope)If men will lead their lives reckless of great men's will, Such life, through great men's powers, will bring perpetual illTamil commentary (Kalaignar)பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்Hindi meaningआदर न कर महान का, करे अगर व्यवहार । होगा उसे महान से, दारुण दुःख अपार ॥Chapter 90: பெரியாரைப் பிழையாமை
Kural 893கெடல்வேண்டிற் கேளாது செய்க அடல்வேண்டின்ஆற்று பவர்கண் இழுக்குKetalventin Kelaadhu Seyka Atalventin Aatru Pavarkan IzhukkuEnglish meaning (G. U. Pope)If a person desires ruin, let him not listen to the righteous dictates of law, but commit crimes against those who are able to slay (other sovereigns)English verse translation (G. U. Pope)Who ruin covet let them shut their ears, and do despite To those who, where they list to ruin have the mightTamil commentary (Kalaignar)ஒருவன், தன்னைத்தானே கெடுத்துக் கொள்ள விரும்பினால் பகையை நினைத்த மாத்திரத்தில் அழிக்கக் கூடிய ஆற்றலுடையவர்களை யார் பேச்சையும் கேட்காமலே இழித்துப் பேசலாம்Hindi meaningकरने की सामर्थ्य है, जब चाहें तब नाश । उनका अपचारी बनो, यदि चाहो निज नाश ॥Chapter 90: பெரியாரைப் பிழையாமை
Kural 894கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்காற்றாதார் இன்னா செயல்Kootraththaik Kaiyaal Viliththatraal Aatruvaarkku Aatraadhaar Innaa SeyalEnglish meaning (G. U. Pope)The weak doing evil to the strong is like beckoning Yama to come (and destroy them)English verse translation (G. U. Pope)When powerless man 'gainst men of power will evil deeds essay, Tis beck'ning with the hand for Death to seize them for its preyTamil commentary (Kalaignar)எந்தத் துன்பத்தையும் தாங்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்களுடன், சிறு துன்பத்தையும் தாங்க முடியாதவர்கள் மோதினால் அவர்களே தங்களின் முடிவுகாலத்தைக் கையசைத்துக் கூப்பிடுகிறார்கள் என்றுதான் பொருள்Hindi meaningकरना जो असमर्थ का, समर्थ का नुक़सान । है वह यम को हाथ से, करना ज्यों आह्वान ॥Chapter 90: பெரியாரைப் பிழையாமை
Kural 895யாண்டுச்சென் றியாண்டும் உளராகார் வெந்துப்பின்வேந்து செறப்பட் டவர்Yaantuch Chendru Yaantum Ularaakaar Vendhuppin Vendhu Serappat TavarEnglish meaning (G. U. Pope)Those who have incurred the wrath of a cruel and mighty potentate will not prosper wherever they may goEnglish verse translation (G. U. Pope)Who dare the fiery wrath of monarchs dread, Where'er they flee, are numbered with the deadTamil commentary (Kalaignar)மிக்க வலிமை பொருந்திய அரசின் கோபத்திற்கு ஆளானவர்கள் தப்பித்து எங்கே சென்றாலும் அங்கு அவர்களால் உயிர் வாழ முடியாதுHindi meaningजो पराक्रमी भूप के, बना कोप का पात्र । बच कर रह सकता कहाँ, कहीं न रक्षा मात्र ॥Chapter 90: பெரியாரைப் பிழையாமை
Kural 896எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்பெரியார்ப் பிழைத்தொழுகு வார்Eriyaal Sutappatinum Uyvuntaam Uyyaar Periyaarp Pizhaiththozhuku VaarEnglish meaning (G. U. Pope)Though burnt by a fire (from a forest), one may perhaps live; (but) never will he live who has shown disrespect to the great (devotees)English verse translation (G. U. Pope)Though in the conflagration caught, he may escape from thence: He 'scapes not who in life to great ones gives offenceTamil commentary (Kalaignar)நெருப்புச் சூழ்ந்து சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்; ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியோரிடம் தவறிழைப்போர் தப்பிப் பிழைப்பது முடியாதுHindi meaningजल जाने पर आग से, बचना संभव जान । बचता नहीं महान का, जो करता अपमान ॥Chapter 90: பெரியாரைப் பிழையாமை
Kural 897வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்தகைமாண்ட தக்கார் செறின்Vakaimaanta Vaazhkkaiyum Vaanporulum Ennaam Thakaimaanta Thakkaar SerinEnglish meaning (G. U. Pope)If a king incurs the wrath of the righteous great, what will become of his government with its splendid auxiliaries and (all) its untold wealth ?English verse translation (G. U. Pope)Though every royal gift, and stores of wealth your life should crown, What are they, if the worthy men of mighty virtue frownTamil commentary (Kalaignar)பெருஞ்செல்வம் குவித்துக்கொண்டு என்னதான் வகைவகையான வாழ்க்கைச் சுகங்களை அனுபவித்தாலும், தகுதி வாய்ந்த பெரியோரின் கோபத்துக்கு முன்னால் அவையனைத்தும் பயனற்றுப் போகும்Hindi meaningतप:श्रेष्ठ हैं जो महा, यदि करते हैं कोप । क्या हो धन संपत्ति की, और विभव की ओप ॥Chapter 90: பெரியாரைப் பிழையாமை
Kural 898குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடுநின்றன்னார் மாய்வர் நிலத்துKundrannaar Kundra Madhippin Kutiyotu Nindrannaar Maaivar NilaththuEnglish meaning (G. U. Pope)If (the) hill-like (devotees) resolve on destruction, those who seemed to be everlasting will be destroyed root and branch from the earthEnglish verse translation (G. U. Pope)If they, whose virtues like a mountain rise, are light esteemed; They die from earth who, with their households, ever-during seemedTamil commentary (Kalaignar)மலை போன்றவர்களின் பெருமையைக் குலைப்பதற்கு நினைப்பவர்கள், நிலைத்த பெரும் செல்வமுடையவர்களாக இருப்பினும் அடியோடு அழிந்து போய் விடுவார்கள்Hindi meaningजो महान हैं अचल सम, करते अगर विचार । जग में शाश्वत सम धनी, मिटता सह परिवार ॥Chapter 90: பெரியாரைப் பிழையாமை
Kural 899ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்துவேந்தனும் வேந்து கெடும்Endhiya Kolkaiyaar Seerin Itaimurindhu Vendhanum Vendhu KetumEnglish meaning (G. U. Pope)Kings even fall from high estate and perish in the flameEnglish verse translation (G. U. Pope)When blazes forth the wrath of men of lofty fame, Kings even fall from high estate and perish in the flameTamil commentary (Kalaignar)உயர்ந்த கொள்கை உறுதி கொடண்வர்கள் சீறி எழுந்தால், அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும்Hindi meaningउत्तम व्रतधारी अगर, होते हैं नाराज । मिट जायेगा इन्द्र भी, गँवा बीच में राज ॥Chapter 90: பெரியாரைப் பிழையாமை
Kural 900இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்சிறந்தமைந்த சீரார் செறின்Irandhamaindha Saarputaiyar Aayinum Uyyaar Sirandhamaindha Seeraar SerinEnglish meaning (G. U. Pope)Though in possession of numerous auxiliaries, they will perish who are-exposed to the wrath of the noble whose penance is boundlessEnglish verse translation (G. U. Pope)Though all-surpassing wealth of aid the boast, If men in glorious virtue great are wrath, they're lostTamil commentary (Kalaignar)என்னதான் எல்லையற்ற வசதிவாய்ப்புகள், வலிமையான துணைகள் உடையவராக இருப்பினும், தகுதியிற் சிறந்த சான்றோரின் சினத்தை எதிர்த்துத் தப்பிப் பிழைக்க முடியாதுHindi meaningतप:श्रेष्ठ यदि क्रुद्ध हों, रखते बडा प्रभाव । रखते बड़े सहाय भी, होता नहीं बचाव ॥Chapter 90: பெரியாரைப் பிழையாமை