Kural 511நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்ததன்மையான் ஆளப் படும்Nanmaiyum Theemaiyum Naati Nalampurindha Thanmaiyaan Aalap PatumEnglish meaning (G. U. Pope)He should be employed (by a king), whose nature leads him to choose the good, after having weighed both the evil and the good in any undertakingEnglish verse translation (G. U. Pope)Who good and evil scanning, ever makes the good his joy; Such man of virtuous mood should king employTamil commentary (Kalaignar)நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்த, நற்செயலில் மட்டுமே நாட்டங் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்கள்Hindi meaningभले-बुरे को परख जो, करता भला पसंद । उसके योग्य नियुक्ति को, करना सही प्रबन्ध ॥Chapter 52: தெரிந்து வினையாடல்
Kural 512வாரி பெருக்கி வளம்படுத் துற்றவைஆராய்வான் செய்க வினைVaari Perukki Valampatuththu Utravai Aaraaivaan Seyka VinaiEnglish meaning (G. U. Pope)Let him do (the king's) work who can enlarge the sources (of revenue), increase wealth and considerately prevent the accidents (which would destroy it)English verse translation (G. U. Pope)Who swells the revenues, spreads plenty o'er the land, Seeks out what hinders progress, his the workman's handTamil commentary (Kalaignar)வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி, இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்கிட வல்லவனே செயலாற்றும் திறனுடையவன்Hindi meaningआय-वृद्धि-साधन बढ़ा, धन-वर्द्धक कर कार्य । विघ्न परख जो टालता, वही करे नृप-कार्य ॥Chapter 52: தெரிந்து வினையாடல்
Kural 513அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்நன்குடையான் கட்டே தெளிவுAnparivu Thetram Avaavinmai Innaankum Nankutaiyaan Katte ThelivuEnglish meaning (G. U. Pope)Let the choice (of a king) fall upon him who largely possesses these four things, love, knowledge, a clear mind and freedom from covetousnessEnglish verse translation (G. U. Pope)A loyal love with wisdom, clearness, mind from avarice free; Who hath these four good gifts should ever trusted beTamil commentary (Kalaignar)அன்பு, அறிவு, செயலாற்றும் திறமை, பேராசைப் படாத குணம் ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத் தேர்வு செய்வதே நலம்Hindi meaningप्रेम, बुद्धि, दृढ़-चित्तता, निर्लोभता-सुनीति । चारों जिसमें पूर्ण हों, उसपर करो प्रतीति ॥Chapter 52: தெரிந்து வினையாடல்
Kural 514எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்வேறாகும் மாந்தர் பலர்Enaivakaiyaan Theriyak Kannum Vinaivakaiyaan Veraakum Maandhar PalarEnglish meaning (G. U. Pope)Even when (a king) has tried them in every possible way, there are many men who change, from the nature of the works (in which they may be employed)English verse translation (G. U. Pope)Even when tests of every kind are multiplied, Full many a man proves otherwise, by action triedTamil commentary (Kalaignar)எவ்வளவுதான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும் செயல்படும் பொழுது வேறுபடுகிறவர்கள் பலர் இருப்பர்Hindi meaningसभी तरह की परख से, योग्य दिखें जो लोग । उनमें कार्य निबाहते, विकृत बने बहु लोग ॥Chapter 52: தெரிந்து வினையாடல்
Kural 515அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்சிறந்தானென் றேவற்பாற் றன்றுArindhaatrich Cheykirpaarku Allaal Vinaidhaan Sirandhaanendru Evarpaar RandruEnglish meaning (G. U. Pope)(A king's) work can only be accomplished by a man of wisdom and patient endurance; it is not of a nature to be given to one from mere personal attachmentEnglish verse translation (G. U. Pope)No specious fav'rite should the king's commission bear, But he that knows, and work performs with patient careTamil commentary (Kalaignar)ஆய்ந்தறிந்து செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல் வேறொருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலில் ஈடுபடுத்தக் கூடாதுHindi meaningजो करता है धैर्य से, खूब समझ सदुपाय । उसे छोड़ प्रिय बन्धु को, कार्य न सौंपा जाय ॥Chapter 52: தெரிந்து வினையாடல்
Kural 516செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடெய்த உணர்ந்து செயல்Seyvaanai Naati Vinainaatik Kaalaththotu Eydha Unarndhu SeyalEnglish meaning (G. U. Pope)Let (a king) act, after having considered the agent (whom he is to employ), the deed (he desires to do), and the time which is suitable to itEnglish verse translation (G. U. Pope)Let king first ask, 'Who shall the deed perform?' and 'What the deed?' Of hour befitting both assured, let every work proceedTamil commentary (Kalaignar)செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்த, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்தவேண்டும்Hindi meaningकर्ता का लक्षण परख, परख कर्म की रीति । संयोजित कर काल से, सौंपों सहित प्रतीति ॥Chapter 52: தெரிந்து வினையாடல்
Kural 517இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்ததனை அவன்கண் விடல்Ithanai Ithanaal Ivanmutikkum Endraaindhu Adhanai Avankan VitalEnglish meaning (G. U. Pope)After having considered, "this man can accomplish this, by these means", let (the king) leave with him the discharge of that dutyEnglish verse translation (G. U. Pope)'This man, this work shall thus work out,' let thoughtful king command; Then leave the matter wholly in his servant's handTamil commentary (Kalaignar)ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்Hindi meaningइस साधन से व्यक्ति यह, कर सकता यह कार्य । परिशीलन कर इस तरह, सौंप उसे वह कार्य ॥Chapter 52: தெரிந்து வினையாடல்
Kural 518வினைக்குரிமை நாடிய பின்றை அவனைஅதற்குரிய னாகச் செயல்Vinaik Kurimai Naatiya Pindrai Avanai Adharkuriya Naakach CheyalEnglish meaning (G. U. Pope)Having considered what work a man is fit for, let (the king) employ him in that workEnglish verse translation (G. U. Pope)As each man's special aptitude is known, Bid each man make that special work his ownTamil commentary (Kalaignar)ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈடுபடுத்த வேண்டும்Hindi meaningयदि पाया इक व्यक्ति को, परख कार्य के योग्य । तो फिर उसे नियुक्त कर, पदवी देना योग्य ॥Chapter 52: தெரிந்து வினையாடல்
Kural 519வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாகநினைப்பானை நீங்குந் திருVinaikkan Vinaiyutaiyaan Kenmaive Raaka Ninaippaanai Neengum ThiruEnglish meaning (G. U. Pope)Prosperity will leave (the king) who doubts the friendship of the man who steadily labours in the discharge of his dutiesEnglish verse translation (G. U. Pope)Fortune deserts the king who ill can bear, Informal friendly ways of men his tolls who shareTamil commentary (Kalaignar)எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும்Hindi meaningतत्परता-वश कार्य में, हुआ मित्र व्यवहार । उसको समझे अन्यता, तो श्री जावे पार ॥Chapter 52: தெரிந்து வினையாடல்
Kural 520நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்கோடாமை கோடா துலகு520 Naatorum Naatuka Mannan Vinaiseyvaan Kotaamai Kotaa ThulakuEnglish meaning (G. U. Pope)Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedlyEnglish verse translation (G. U. Pope)Let king search out his servants' deeds each day; When these do right, the world goes rightly on its wayTamil commentary (Kalaignar)உழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின் செழிப்பும் வாடாமல் இருக்கும் எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்தறிந்து ஆவன செய்ய வேண்டும்Hindi meaningराज-भृत्य यदि विकृत नहिं, विकृत न होगा राज । रोज़ परखना चाहिये, नृप को उसका काज ॥Chapter 52: தெரிந்து வினையாடல்