Kural 331நில்லாத வற்றை நிலையின என்றுணரும்புல்லறி வாண்மை கடைNillaadha Vatrai Nilaiyina Endrunarum Pullari Vaanmai KataiEnglish meaning (G. U. Pope)That ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise)English verse translation (G. U. Pope)Lowest and meanest lore, that bids men trust secure, In things that pass away, as things that shall endureTamil commentary (Kalaignar)நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்Hindi meaningजो है अनित्य वस्तुएँ, नित्य वस्तु सम भाव । अल्पबुद्धिवश जो रहा, है यह नीच स्वभाव ॥Chapter 34: நிலையாமை
Kural 332கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்போக்கும் அருவிளிந் தற்றுKooththaattu Avaik Kuzhaath Thatre Perunjelvam Pokkum Adhuvilin ThatruEnglish meaning (G. U. Pope)The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre; its expenditure is like the breaking up of that assemblyEnglish verse translation (G. U. Pope)As crowds round dancers fill the hall, is wealth's increase; Its loss, as throngs dispersing, when the dances ceaseTamil commentary (Kalaignar)சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும்Hindi meaningरंग-भूमि में ज्यो जमे, दर्शक गण की भीड़ । जुड़े प्रचुर संपत्ति त्यों, छँटे यथा वह भीड़ ॥Chapter 34: நிலையாமை
Kural 333அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்அற்குப ஆங்கே செயல்Arkaa Iyalpitruch Chelvam Adhupetraal Arkupa Aange SeyalEnglish meaning (G. U. Pope)Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishableEnglish verse translation (G. U. Pope)Unenduring is all wealth; if you wealth enjoy, Enduring works in working wealth straightway employTamil commentary (Kalaignar)நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும்Hindi meaningधन की प्रकृति अनित्य है, यदि पावे ऐश्वर्य । तो करना तत्काल ही, नित्य धर्म सब वर्य ॥Chapter 34: நிலையாமை
Kural 334நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்வாள துணர்வார்ப் பெறின்Naalena Ondrupor Kaatti Uyir Eerum Vaaladhu Unarvaarp PerinEnglish meaning (G. U. Pope)Time, which shows itself (to the ignorant) as if it were something (real) is in the estimation of the wise (only) a saw which cuts down lifeEnglish verse translation (G. U. Pope)As 'day' it vaunts itself; well understood, 'tis knife', That daily cuts away a portion from thy lifeTamil commentary (Kalaignar)வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள்Hindi meaningकाल-मान सम भासता, दिन है आरी-दांत । सोचो तो वह आयु को, चीर रहा दुर्दान्त ॥Chapter 34: நிலையாமை
Kural 335நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினைமேற்சென்று செய்யாப் படும்Naachchetru Vikkulmel Vaaraamun Nalvinai Mersendru Seyyap PatumEnglish meaning (G. U. Pope)Let virtuous deeds be done quickly, before the hiccup comes making the tongue silentEnglish verse translation (G. U. Pope)Before the tongue lie powerless, 'mid the gasp of gurgling breath, Arouse thyself, and do good deeds beyond the power of deathTamil commentary (Kalaignar)வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்Hindi meaningजीभ बंद हो, हिचकियाँ लगने से ही पूर्व । चटपट करना चाहिये, जो है कर्म अपूर्व ॥Chapter 34: நிலையாமை
Kural 336நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை யுடைத்திவ் வுலகுNerunal Ulanoruvan Indrillai Ennum Perumai Utaiththuiv VulakuEnglish meaning (G. U. Pope)This world possesses the greatness that one who yesterday was is not todayEnglish verse translation (G. U. Pope)Existing yesterday, today to nothing hurled!- Such greatness owns this transitory worldTamil commentary (Kalaignar)இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாகப் கொண்டதாகும்Hindi meaningकल जो था, बस, आज तो, प्राप्त किया पंचत्व । पाया है संसार ने, ऐसा बड़ा महत्व ॥Chapter 34: நிலையாமை
Kural 337ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுபகோடியு மல்ல பலOrupozhudhum Vaazhvadhu Ariyaar Karudhupa Kotiyum Alla PalaEnglish meaning (G. U. Pope)Innumerable are the thoughts which occupy the mind of (the unwise), who know not that they shall live another momentEnglish verse translation (G. U. Pope)Who know not if their happy lives shall last the day, In fancies infinite beguile the hours awayTamil commentary (Kalaignar)ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டைகள் கட்டுவார்கள்Hindi meaningअगले क्षण क्या जी रहें, इसका है नहिं बोध । चिंतन कोटिन, अनगिनत, करते रहें अबोध ॥Chapter 34: நிலையாமை
Kural 338குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றேஉடம்போ டுயிரிடை நட்புKutampai Thaniththu Ozhiyap Pulparan Thatre Utampotu Uyiritai NatpuEnglish meaning (G. U. Pope)The love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves emptyEnglish verse translation (G. U. Pope)Birds fly away, and leave the nest deserted bare; Such is the short-lived friendship soul and body shareTamil commentary (Kalaignar)உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்Hindi meaningअंडा फूट हुआ अलग, तो पंछी उड़ जाय । वैसा देही-देह का, नाता जाना जाय ॥Chapter 34: நிலையாமை
Kural 339உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கிவிழிப்பது போலும் பிறப்புUrangu Vadhupolunj Chaakkaatu Urangi Vizhippadhu Polum PirappuEnglish meaning (G. U. Pope)Death is like sleep; birth is like awaking from itEnglish verse translation (G. U. Pope)Death is sinking into slumbers deep; Birth again is waking out of sleepTamil commentary (Kalaignar)நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்புHindi meaningनिद्रा सम ही जानिये, होता है देहान्त । जगना सम है जनन फिर, निद्रा के उपरान्त ॥Chapter 34: நிலையாமை
Kural 340புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள்துச்சி லிருந்த உயிர்க்குPukkil Amaindhindru Kollo Utampinul Thuchchil Irundha UyirkkuEnglish meaning (G. U. Pope)It seems as if the soul, which takes a temporary shelter in a body, had not attained a homeEnglish verse translation (G. U. Pope)The soul in fragile shed as lodger courts repose:- Is it because no home's conclusive rest it knowsTamil commentary (Kalaignar)உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாதுHindi meaningआत्मा का क्या है नहीं, कोई स्थायी धाम । सो तो रहती देह में, भाड़े का सा धाम ॥Chapter 34: நிலையாமை