Kural 181அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்புறங்கூறா னென்றல் இனிதுArangooraan Alla Seyinum Oruvan Purangooraan Endral InidhuEnglish meaning (G. U. Pope)Though one do not even speak of virtue and live in sin, it will be well if it be said of him "he does not backbite."English verse translation (G. U. Pope)Though virtuous words his lips speak not, and all his deeds are ill If neighbour he defame not, there's good within him stillTamil commentary (Kalaignar)அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லதுHindi meaningनाम न लेगा धर्म का, करे अधर्मिक काम । फिर भी अच्छा यदि वही, पाये अपिशुन नाम ॥Chapter 19: புறங்கூறாமை
Kural 182அறனழீஇ யல்லவை செய்தலின் தீதேபுறனழீஇப் பொய்த்து நகைAranazheei Allavai Seydhalin Theedhe Puranazheeip Poiththu NakaiEnglish meaning (G. U. Pope)To smile deceitfully (in another's presence) after having reviled him to his destruction (behind his back) is a greater evil than the commission of (every other) sin and the destruction of (every) virtueEnglish verse translation (G. U. Pope)Than he who virtue scorns, and evil deeds performs, more vile, Is he that slanders friend, then meets him with false smileTamil commentary (Kalaignar)ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானதுHindi meaningनास्तिवाद कर धर्म प्रति, करता पाप अखण्ड । उससे बदतर पिशुनता, सम्मुख हँस पाखण्ड ॥Chapter 19: புறங்கூறாமை
Kural 183புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்அறங்கூறும் ஆக்கந் தரும்Purangoorip Poiththuyir Vaazhdhalin Saadhal Arangootrum Aakkath TharumEnglish meaning (G. U. Pope)Death rather than life will confer upon the deceitful backbiter the profit which (the treatises on) virtue point outEnglish verse translation (G. U. Pope)'Tis greater gain of virtuous good for man to die, Than live to slander absent friend, and falsely praise when nighTamil commentary (Kalaignar)கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்றுHindi meaningचुगली खा कर क्या जिया, चापलूस हो साथ । भला, मृत्यु हो, तो लगे, शास्त्र- उक्त फल हाथ ॥Chapter 19: புறங்கூறாமை
Kural 184கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்கமுன்னின்று பின்னோக்காச் சொல்Kannindru Kannarach Chollinum Sollarka Munnindru Pinnokkaach CholEnglish meaning (G. U. Pope)Though you speak without kindness before another's face speak not in his absence words which regard not the evil subsequently resulting from itEnglish verse translation (G. U. Pope)In presence though unkindly words you speak, say not In absence words whose ill result exceeds your thoughtTamil commentary (Kalaignar)நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறுHindi meaningकोई मूँह पर ही कहे, यद्यपि निर्दय बात । कहो पीठ पीछे नहीं, जो न सुचिंतित बात ॥Chapter 19: புறங்கூறாமை
Kural 185அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்புன்மையாற் காணப் படும்Aranjollum Nenjaththaan Anmai Puranjollum Punmaiyaar Kaanap PatumEnglish meaning (G. U. Pope)The emptiness of that man's mind who (merely) praises virtue will be seen from the meanness of reviling another behind his backEnglish verse translation (G. U. Pope)The slanderous meanness that an absent friend defames, 'This man in words owns virtue, not in heart,' proclaimsTamil commentary (Kalaignar)ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக்கொண்டே அவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்Hindi meaningप्रवचन-लीन सुधर्म के, हृदय धर्म से हीन । भण्डा इसका फोड़ दे, पैशुन्य ही मलीन ॥Chapter 19: புறங்கூறாமை
Kural 186பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்திறன்தெரிந்து கூறப் படும்Piranpazhi Kooruvaan Thanpazhi Yullum Thirandherindhu Koorap PatumEnglish meaning (G. U. Pope)The character of the faults of that man who publishes abroad the faults of others will be sought out and publishedEnglish verse translation (G. U. Pope)Who on his neighbours' sins delights to dwell, The story of his sins, culled out with care, the world will tellTamil commentary (Kalaignar)பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச் செயல்களை ஆராய்ந்து அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும்Hindi meaningपरदूषक यदि तू बना, तुझमें हैं जो दोष । उनमें चुन सबसे बुरे, वह करता है घोष ॥Chapter 19: புறங்கூறாமை
Kural 187பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லிநட்பாடல் தேற்றா தவர்Pakachchollik Kelirp Pirippar Nakachcholli Natpaatal Thetraa ThavarEnglish meaning (G. U. Pope)Those who know not to live in friendship with amusing conversation will by back-biting estrange even their relativesEnglish verse translation (G. U. Pope)With friendly art who know not pleasant words to say, Speak words that sever hearts, and drive choice friends awayTamil commentary (Kalaignar)இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்Hindi meaningजो करते नहिं मित्रता, मधुर वचन हँस बोल । अलग करावें बन्धु को, परोक्ष में कटु बोल ॥Chapter 19: புறங்கூறாமை
Kural 188துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர்என்னைகொல் ஏதிலார் மாட்டுThunniyaar Kutramum Thootrum Marapinaar Ennaikol Edhilaar MaattuEnglish meaning (G. U. Pope)What will those not do to strangers whose nature leads them to publish abroad the faults of their intimate friends ?English verse translation (G. U. Pope)Whose nature bids them faults of closest friends proclaim What mercy will they show to other men's good nameTamil commentary (Kalaignar)நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற குணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச மாட்டார்கள்?Hindi meaningमित्रों के भी दोष का, घोषण जिनका धर्म । जाने अन्यों के प्रति, क्या क्या करें कुकर्म ॥Chapter 19: புறங்கூறாமை
Kural 189அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்புன்சொ லுரைப்பான் பொறைArannokki Aatrungol Vaiyam Purannokkip Punsol Uraippaan PoraiEnglish meaning (G. U. Pope)The world through charity supports the weight of those who reproach others observing their absenceEnglish verse translation (G. U. Pope)'Tis charity, I ween, that makes the earth sustain their load Who, neighbours' absence watching, tales or slander tell abroadTamil commentary (Kalaignar)ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை `இவனைச் சுமப்பதும் அறமே' என்று கருதித்தான் நிலம் சுமக்கிறதுHindi meaningक्षमाशीलता धर्म है, यों करके सुविचार । क्या ढोती है भूमि भी, चुगलखोर का भार ॥Chapter 19: புறங்கூறாமை
Kural 190ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்தீதுண்டோ மன்னு முயிர்க்குEdhilaar Kutrampol Thangutrang Kaankirpin Theedhunto Mannum UyirkkuEnglish meaning (G. U. Pope)If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men ?English verse translation (G. U. Pope)If each his own, as neighbours' faults would scan, Could any evil hap to living manTamil commentary (Kalaignar)பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்Hindi meaningपरछिद्रानवेषण सदृश, यदि देखे निज दोष । ति अविनाशी जीव का, क्यों हो दुख से शोष ॥Chapter 19: புறங்கூறாமை