Kural 911அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்இன்சொல் இழுக்குத் தரும்Anpin Vizhaiyaar Porulvizhaiyum Aaidhotiyaar Insol Izhukkuth TharumEnglish meaning (G. U. Pope)The sweet words of elegant braceleted (prostitutes) who desire (a man) not from affection but from avarice, will cause sorrowEnglish verse translation (G. U. Pope)Those that choice armlets wear who seek not thee with love, But seek thy wealth, their pleasant words will ruin proveTamil commentary (Kalaignar)அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும்Hindi meaningचाह नहीं है प्रेमवश, धनमूलक है चाह । ऐसी स्त्री का मधुर वच, ले लेता है आह ॥Chapter 92: வரைவின் மகளிர்
Kural 912பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்நயன்தூக்கி நள்ளா விடல்Payandhookkip Panpuraikkum Panpin Makalir Nayandhookki Nallaa VitalEnglish meaning (G. U. Pope)One must ascertain the character of the ill-natured women who after ascertaining the wealth (of a man) speak (as if they were) good natured-ones, and avoid intercourse (with them)English verse translation (G. U. Pope)Who weigh the gain, and utter virtuous words with vicious heart, Weighing such women's worth, from their society departTamil commentary (Kalaignar)ஆதாயத்தைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு பாகுமொழிபேசும் பொதுமகளிர் உறவை ஒருபோதும் நம்பி ஏமாறக்கூடாதுHindi meaningमधुर वचन है बोलती, तोल लाभ का भाग । वेश्या के व्यवहार को, सोच समागम त्याग ॥Chapter 92: வரைவின் மகளிர்
Kural 913பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்ஏதில் பிணந்தழீஇ அற்றுPorutpentir Poimmai Muyakkam Iruttaraiyil Edhil Pinandhazheei AtruEnglish meaning (G. U. Pope)The false embraces of wealth-loving women are like (hired men) embracing a strange corpse in a dark roomEnglish verse translation (G. U. Pope)As one in darkened room, some stranger corpse inarms, Is he who seeks delight in mercenary women's charmsTamil commentary (Kalaignar)விலைமாதர்கள் பணத்துக்காக மட்டுமே ஒருவரைத் தழுவிப் பொய்யன்பு காட்டி நடிப்பது, இருட்டறையில் ஓர் அந்நியப் பிணத்தை அணைத்துக் கிடப்பது போன்றதாகும்Hindi meaningपण-स्त्री आलिंगन रहा, यों झूठा ही जान । ज्यों लिपटे तम-कोष्ठ में, मुरदे से अनजान ॥Chapter 92: வரைவின் மகளிர்
Kural 914பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்ஆயும் அறிவி னவர்Porutporulaar Punnalan Thoyaar Arutporul Aayum Arivi NavarEnglish meaning (G. U. Pope)The wise who seek the wealth of grace will not desire the base favours of those who regard wealth (and not pleasure) as (their) richesEnglish verse translation (G. U. Pope)Their worthless charms, whose only weal is wealth of gain, From touch of these the wise, who seek the wealth of grace, abstainTamil commentary (Kalaignar)அருளை விரும்பி ஆராய்ந்திடும் அறிவுடையவர்கள் பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாகக் கருதுவார்கள்Hindi meaningरहता है परमार्थ में, जिनका मनोनियोग । अर्थ-अर्थिनी तुच्छ सुख, करते नहिं वे भोग ॥Chapter 92: வரைவின் மகளிர்
Kural 915பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்மாண்ட அறிவி னவர்Podhunalaththaar Punnalam Thoyaar Madhinalaththin Maanta Arivi NavarEnglish meaning (G. U. Pope)Those whose knowledge is made excellent by their (natural) sense will not covet the trffling delightsEnglish verse translation (G. U. Pope)From contact with their worthless charms, whose charms to all are free, The men with sense of good and lofty wisdom blest will flee;Tamil commentary (Kalaignar)இயற்கையறிவும் மேலும் கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்கள் பொதுமகளிர் தரும் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள்Hindi meaningसहज बुद्धि के साथ है, जिनका विशिष्ट ज्ञान । पण्य-स्त्री का तुच्छ सुख, भोगेंगे नहिं जान ॥Chapter 92: வரைவின் மகளிர்
Kural 916தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்புன்னலம் பாரிப்பார் தோள்Thannalam Paarippaar Thoyaar Thakaiserukkip Punnalam Paarippaar TholEnglish meaning (G. U. Pope)Those who would spread (the fame of) their own goodness will not desire the shoulders of those,who rejoice in their accomplishments and bestow their despicable favours (on all who pay)English verse translation (G. U. Pope)From touch of those who worthless charms, with wanton arts, display, The men who would their own true good maintain will turn awayTamil commentary (Kalaignar)புகழ்ச்சிக்குரிய சான்றோர் எவரும், இகழ்ச்சிக்குரிய இன்பவல்லிகளின் தோளில் சாய்ந்து கிடக்க மாட்டார்Hindi meaningरूप-दृप्त हो तुच्छ सुख, जो देती हैं बेच । निज यश-पालक श्रेष्ठ जन, गले लगें नहिं, हेच ॥Chapter 92: வரைவின் மகளிர்
Kural 917நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்பேணிப் புணர்பவர் தோள்Nirainenjam Illavar Thoivaar Piranenjir Penip Punarpavar TholEnglish meaning (G. U. Pope)Those who are destitute of a perfectly (reformed) mind will covet the shoulders of those who embrace (them) while their hearts covet other thingsEnglish verse translation (G. U. Pope)Who cherish alien thoughts while folding in their feigned embrace, These none approach save those devoid of virtue's graceTamil commentary (Kalaignar)உள்ளத்தில் அன்பு இல்லாமல் தன்னலத்துக்காக உடலுறவு கொள்ளும் பொதுமகளிர் தோளை, உறுதியற்ற மனம் படைத்தோர் மட்டும் நம்பிக் கிடப்பர்Hindi meaningकरती है संभोग जो, लगा अन्य में चित्त । उससे गले लगे वही, जिसका चंचल चित्त ॥Chapter 92: வரைவின் மகளிர்
Kural 918ஆயும் அறிவினர் அல்லார்க் கணங்கென்பமாய மகளிர் முயக்குAayum Arivinar Allaarkku Anangenpa Maaya Makalir MuyakkuEnglish meaning (G. U. Pope)The wise say that to such as are destitute of discerning sense the embraces of faithless women are (as ruinous as those of) the celestail femaleEnglish verse translation (G. U. Pope)As demoness who lures to ruin woman's treacherous love To men devoid of wisdom's searching power will proveTamil commentary (Kalaignar)வஞ்சக எண்ணங்கொண்ட ``பொதுமகள்'' ஒருத்தியிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட ``மோகினி மயக்கம்'' என்று கூறுவார்கள்Hindi meaningजो स्त्री है मायाविनी, उसका भोग विलास । अविवेकी जन के लिये, रहा मोहिनी-पाश ॥Chapter 92: வரைவின் மகளிர்
Kural 919வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்பூரியர்கள் ஆழும் அளறுVaraivilaa Maanizhaiyaar Mendhol Puraiyilaap Pooriyarkal Aazhum AlaruEnglish meaning (G. U. Pope)The delicate shoulders of prostitutes with excellent jewels are a hell into which are plunged the ignorant baseEnglish verse translation (G. U. Pope)The wanton's tender arm, with gleaming jewels decked, Is hell, where sink degraded souls of men abjectTamil commentary (Kalaignar)விலைமகளை விரும்பி அவள் பின்னால் போவதற்கும் ``நரகம்'' எனச் சொல்லப்படும் சகதியில் விழுவதற்கும் வேறுபாடே இல்லைHindi meaningवेश्या का कंधा मृदुल, भूषित है जो खूब । मूढ-नीच उस नरक में, रहते हैं कर डूब ॥Chapter 92: வரைவின் மகளிர்
Kural 920இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்திருநீக்கப் பட்டார் தொடர்பு920 Irumanap Pentirum Kallum Kavarum Thiruneekkap Pattaar ThotarpuEnglish meaning (G. U. Pope)Treacherous women, liquor, and gambling are the associates of such as have forsaken by FortuneEnglish verse translation (G. U. Pope)Women of double minds, strong drink, and dice; to these giv'n o'er, Are those on whom the light of Fortune shines no moreTamil commentary (Kalaignar)இருமனம் கொண்ட பொதுமகளிருடனும், மதுவுடனும், சூதாட்டத்தினிடமும் தொடர்பு கொண்டு உழல்வோரைவிட்டு வாழ்வில் அமைய வேண்டிய சிறப்பு அகன்றுவிடும்Hindi meaningद्वैध-मना व्यभिचारिणी, मद्य, जुए का खेल । लक्ष्मी से जो त्यक्त हैं, उनका इनसे मेल ॥Chapter 92: வரைவின் மகளிர்