Kural 61பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்தமக்கட்பே றல்ல பிறPerumavatrul Yaamarivadhu Illai Arivarindha Makkatperu Alla PiraEnglish meaning (G. U. Pope)Among all the benefits that may be acquired, we know no greater benefit than the acquisition of intelligent childrenEnglish verse translation (G. U. Pope)Of all that men acquire, we know not any greater gain, Than that which by the birth of learned children men obtainTamil commentary (Kalaignar)அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லைHindi meaningबुद्धिमान सन्तान से, बढ़ कर विभव सुयोग्य । हम तो मानेंगे नहीं, हैं पाने के योग्य ॥Chapter 7: மக்கட்பேறு
Kural 62எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்பண்புடை மக்கட் பெறின்Ezhupirappum Theeyavai Theentaa Pazhipirangaap Panputai Makkat PerinEnglish meaning (G. U. Pope)The evils of the seven births shall not touch those who abtain children of a good disposition, free from viceEnglish verse translation (G. U. Pope)Who children gain, that none reproach, of virtuous worth, No evils touch them, through the sev'n-fold maze of birthTamil commentary (Kalaignar)பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாதுHindi meaningसात जन्म तक भी उसे, छू नहिं सकता ताप । यदि पावे संतान जो, शीलवान निष्पाप ॥Chapter 7: மக்கட்பேறு
Kural 63தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்தந்தம் வினையான் வரும்Thamporul Enpadham Makkal Avarporul Thamdham Vinaiyaan VarumEnglish meaning (G. U. Pope)Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalfEnglish verse translation (G. U. Pope)'Man's children are his fortune,' say the wise; From each one's deeds his varied fortunes riseTamil commentary (Kalaignar)தம் பொருள் என்பது தம்மக்களையேயாம் அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவைHindi meaningनिज संतान-सुकर्म से, स्वयं धन्य हों जान । अपना अर्थ सुधी कहें, है अपनी संतान ॥Chapter 7: மக்கட்பேறு
Kural 64அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்சிறுகை அளாவிய கூழ்Amizhdhinum Aatra Inidhedham Makkal Sirukai Alaaviya KoozhEnglish meaning (G. U. Pope)The rice in which the little hand of their children has dabbled will be far sweeter (to the parent) than ambrosiaEnglish verse translation (G. U. Pope)Than God's ambrosia sweeter far the food before men laid, In which the little hands of children of their own have play'dTamil commentary (Kalaignar)சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறதுHindi meaningनन्हे निज संतान के, हाथ विलोड़ा भात । देवों के भी अमृत का, स्वाद करेगा मात ॥Chapter 7: மக்கட்பேறு
Kural 65மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்சொற்கேட்டல் இன்பம் செவிக்குMakkalmey Theental Utarkinpam Matru Avar Sorkettal Inpam SevikkuEnglish meaning (G. U. Pope)The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the earEnglish verse translation (G. U. Pope)To patent sweet the touch of children dear; Their voice is sweetest music to his earTamil commentary (Kalaignar)தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்Hindi meaningनिज शिशु अंग-स्पर्श से, तन को है सुख-लाभ । टूटी- फूटी बात से, श्रुति को है सुख-लाभ ॥Chapter 7: மக்கட்பேறு
Kural 66குழலினி தியாழினி தென்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர்Kuzhal Inidhu Yaazhinidhu Enpadham Makkal Mazhalaichchol Kelaa ThavarEnglish meaning (G. U. Pope)"The pipe is sweet, the lute is sweet," say those who have not heard the prattle of their own childrenEnglish verse translation (G. U. Pope)'The pipe is sweet,' 'the lute is sweet,' by them't will be averred, Who music of their infants' lisping lips have never heardTamil commentary (Kalaignar)தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்Hindi meaningमुरली-नाद मधुर कहें, सुमधुर वीणा-गान । तुतलाना संतान का, जो न सुना निज कान ॥Chapter 7: மக்கட்பேறு
Kural 67தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்துமுந்தி இருப்பச் செயல்Thandhai Makarkaatrum Nandri Avaiyaththu Mundhi Iruppach CheyalEnglish meaning (G. U. Pope)The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learnedEnglish verse translation (G. U. Pope)Sire greatest boon on son confers, who makes him meet, In councils of the wise to fill the highest seatTamil commentary (Kalaignar)தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்Hindi meaningपिता करे उपकार यह, जिससे निज संतान । पंडित-सभा-समाज में, पावे अग्रस्थान ॥Chapter 7: மக்கட்பேறு
Kural 68தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்துமன்னுயிர்க் கெல்லாம் இனிதுThammindham Makkal Arivutaimai Maanilaththu Mannuyirk Kellaam InidhuEnglish meaning (G. U. Pope)That their children should possess knowledge is more pleasing to all men of this great earth than to themselvesEnglish verse translation (G. U. Pope)Their children's wisdom greater than their own confessed, Through the wide world is sweet to every human breastTamil commentary (Kalaignar)பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்Hindi meaningविद्यार्जन संतान का, अपने को दे तोष । उससे बढ़ सब जगत को, देगा वह संतोष ॥Chapter 7: மக்கட்பேறு
Kural 69ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்சான்றோன் எனக்கேட்ட தாய்Eendra Pozhudhin Peridhuvakkum Thanmakanaich Chaandron Enakketta ThaaiEnglish meaning (G. U. Pope)The mother who hears her son called "a wise man" will rejoice more than she did at his birthEnglish verse translation (G. U. Pope)When mother hears him named 'fulfill'd of wisdom's lore,' Far greater joy she feels, than when her son she boreTamil commentary (Kalaignar)நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்Hindi meaningपुत्र जनन पर जो हुआ, उससे बढ़ आनन्द । माँ को हो जब वह सुने, महापुरुष निज नन्द ॥Chapter 7: மக்கட்பேறு
Kural 70மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தைஎன்நோற்றான் கொல்லெனும் சொல்Makandhandhaikku Aatrum Udhavi Ivandhandhai Ennotraan Kol Enum SolEnglish meaning (G. U. Pope)(So to act) that it may be said "by what great penance did his father beget him," is the benefit which a son should render to his fatherEnglish verse translation (G. U. Pope)To sire, what best requital can by grateful child be done? To make men say, 'What merit gained the father such a son?'Tamil commentary (Kalaignar)``ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு'', என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்Hindi meaningपुत्र पिता का यह करे, बदले में उपकार । `धन्य धन्य इसके पिता’, यही कहे संसार ॥Chapter 7: மக்கட்பேறு