Kural 661வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்மற்றைய எல்லாம் பிறVinaiththitpam Enpadhu Oruvan Manaththitpam Matraiya Ellaam PiraEnglish meaning (G. U. Pope)Firmness in action is (simply) one's firmness of mind; all other (abilities) are not of this natureEnglish verse translation (G. U. Pope)What men call 'power in action' know for 'power of mind' Externe to man all other aids you findTamil commentary (Kalaignar)மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காதுHindi meaningदृढ़ रहना ही कर्म में, मन की दृढ़ता जान । दृढ़ता कहलाती नहीं, जो है दृढ़ता आन ॥Chapter 67: வினைத்திட்பம்
Kural 662ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்Oororaal Utrapin Olkaamai Ivvirantin Aarenpar Aaindhavar KolEnglish meaning (G. U. Pope)Not to perform a ruinous act, and not to be discouraged by the ruinous termination of an act, are the two maxims which, the wise say, from the principles of those who have investigated the subjectEnglish verse translation (G. U. Pope)'Each hindrance shun', 'unyielding onward press, If obstacle be there,' These two define your way, so those that search out truth declareTamil commentary (Kalaignar)இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து விடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம்Hindi meaningदुष्ट न करना, यदि हुआ, तो फिर न हो अधीर । मत यह है नीतिज्ञ का, दो पथ मानें मीर ॥Chapter 67: வினைத்திட்பம்
Kural 663கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்எற்றா விழுமந் தரும்663, Kataikkotkach Cheydhakka Thaanmai Itaikkotkin Etraa Vizhuman TharumEnglish meaning (G. U. Pope)So to perform an act as to publish it (only) at its termination is (true) manliness; for to announce it beforehand, will cause irremediable sorrowEnglish verse translation (G. U. Pope)Man's fitting work is known but by success achieved; In midst the plan revealed brings ruin ne'er to be retrievedTamil commentary (Kalaignar)செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும் இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும்Hindi meaningप्रकट किया कर्मान्त में, तो है योग्य सुधीर । प्रकट किया यदि बीच में, देगा अनन्त पीर ॥Chapter 67: வினைத்திட்பம்
Kural 664சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்சொல்லிய வண்ணம் செயல்Solludhal Yaarkkum Eliya Ariyavaam Solliya Vannam SeyalEnglish meaning (G. U. Pope)To say (how an act is to be performed) is (indeed) easy for any one; but far difficult it is to do according to what has been saidEnglish verse translation (G. U. Pope)Easy to every man the speech that shows the way; Hard thing to shape one's life by words they sayTamil commentary (Kalaignar)சொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம்Hindi meaningकहना तो सब के लिये, रहता है आसान । करना जो जैसा कहे, है दुस्साध्य निदान ॥Chapter 67: வினைத்திட்பம்
Kural 665வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்ஊறெய்தி உள்ளப் படும்Veereydhi Maantaar Vinaiththitpam Vendhankan Ooreydhi Ullap PatumEnglish meaning (G. U. Pope)The firmness in action of those who have become great by the excellence (of their counsel) will, by attaining its fulfilment in the person of the king, be esteemed (by all).English verse translation (G. U. Pope)The power in act of men renowned and great, With king acceptance finds and fame through all the stateTamil commentary (Kalaignar)செயல் திறனால் சிறப்புற்ற மாண்புடையவரின் வினைத் திட்பமானது, ஆட்சியாளரையும் கவர்ந்து பெரிதும் மதித்துப் போற்றப்படும்Hindi meaningकीर्ति दिला कर सचित को, कर्म-निष्ठता-बान । नृप पर डाल प्रभाव वह, पावेगी सम्मान ॥Chapter 67: வினைத்திட்பம்
Kural 666எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்திண்ணியர் ஆகப் பெறின்Enniya Enniyaangu Eydhu Enniyaar Thinniyar Aakap PerinEnglish meaning (G. U. Pope)If those who have planned (an undertaking) possess firmness (in executing it) they will obtain what they have desired even as they have desired itEnglish verse translation (G. U. Pope)Whate'er men think, ev'n as they think, may men obtain, If those who think can steadfastness of will retainTamil commentary (Kalaignar)எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்Hindi meaningसंकल्पित सब वस्तुएँ, यथा किया संकल्प । संकल्पक का जायगा, यदि वह दृढ़-संकल्प ॥Chapter 67: வினைத்திட்பம்
Kural 667உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கச்சாணி யன்னார் உடைத்துUruvukantu Ellaamai Ventum Urulperundherkku Achchaani Annaar UtaiththuEnglish meaning (G. U. Pope)Let none be despised for (their) size; (for) the world has those who resemble the linch-pin of the big rolling carEnglish verse translation (G. U. Pope)Despise not men of modest bearing; Look not at form, but what men are: For some there live, high functions sharing, Like linch-pin of the mighty carTamil commentary (Kalaignar)உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்Hindi meaningतिरस्कार करना नहीं, छोटा क़द अवलोक । चलते भारी यान में, अक्ष-आणि सम लोग ॥Chapter 67: வினைத்திட்பம்
Kural 668கலங்காது கண்ட வினைக்கண் துளங்காதுதூக்கங் கடிந்து செயல்Kalangaadhu Kanta Vinaikkan Thulangaadhu Thookkang Katindhu SeyalEnglish meaning (G. U. Pope)An act that has been firmly resolved on must be as firmly carried out without delayEnglish verse translation (G. U. Pope)What clearly eye discerns as right, with steadfast will, And mind unslumbering, that should man fulfilTamil commentary (Kalaignar)மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்Hindi meaningसोच समझ निश्चय किया, करने का जो कर्म । हिचके बिन अविलम्ब ही, कर देना वह कर्म ॥Chapter 67: வினைத்திட்பம்
Kural 669துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றிஇன்பம் பயக்கும் வினைThunpam Uravarinum Seyka Thunivaatri Inpam Payakkum VinaiEnglish meaning (G. U. Pope)Though it should cause increasing sorrow (at the outset), do with firmness the act that yield bliss (in the end)English verse translation (G. U. Pope)Though toil and trouble face thee, firm resolve hold fast, And do the deeds that pleasure yield at lastTamil commentary (Kalaignar)இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்Hindi meaningयद्यपि होगा बहुत दुख, दृढ़ता से काम । सुख-फल दायक ही रहा, जिसका शुभ परिणाम ॥Chapter 67: வினைத்திட்பம்
Kural 670எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம்வேண்டாரை வேண்டா துலகுEnaiththitpam Ey Thiyak Kannum Vinaiththitpam Ventaarai Ventaadhu UlakuEnglish meaning (G. U. Pope)The great will not esteem those who esteem not firmness of action, whatever other abilities the latter may possessEnglish verse translation (G. U. Pope)The world desires not men of every power possessed, Who power in act desire not,- crown of all the restTamil commentary (Kalaignar)எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காதுHindi meaningअन्य विषय में सदृढ़ता, रखते सचिव सुजान । यदि दृढ़ता नहिं कर्म की, जग न करेगा मान ॥Chapter 67: வினைத்திட்பம்