Kural 481பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்வேந்தர்க்கு வேண்டும் பொழுதுPakalvellum Kookaiyaik Kaakkai Ikalvellum Vendharkku Ventum PozhudhuEnglish meaning (G. U. Pope)A crow will overcome an owl in the day time; so the king who would conquer his enemy must have (a suitable) timeEnglish verse translation (G. U. Pope)A crow will conquer owl in broad daylight; The king that foes would crush, needs fitting time to fightTamil commentary (Kalaignar)பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கைவென்று விடும் எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்Hindi meaningदिन में उल्लू पर विजय, पा लेता है काक । नृप जिगीषु को चाहिये, उचित समय की ताक ॥Chapter 49: காலமறிதல்
Kural 482பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்தீராமை ஆர்க்குங் கயிறுParuvaththotu Otta Ozhukal Thiruvinaith Theeraamai Aarkkung KayiruEnglish meaning (G. U. Pope)Acting at the right season, is a cord that will immoveably bind success (to a king)English verse translation (G. U. Pope)The bond binds fortune fast is ordered effort made, Strictly observant still of favouring season's aidTamil commentary (Kalaignar)காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்Hindi meaningलगना जो है कार्य में, अवसर को पहचान । श्री को जाने से जकड़, रखती रस्सी जान ॥Chapter 49: காலமறிதல்
Kural 483அருவினை யென்ப உளவோ கருவியாற்கால மறிந்து செயின்Aruvinai Yenpa Ulavo Karuviyaan Kaalam Arindhu SeyinEnglish meaning (G. U. Pope)Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time ?English verse translation (G. U. Pope)Can any work be hard in very fact, If men use fitting means in timely actTamil commentary (Kalaignar)தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லைHindi meaningहै क्या कार्य असाध्य भी, यदि अवसर को जान । समिचित साधन के सहित, करता कार्य सुजान ॥Chapter 49: காலமறிதல்
Kural 484ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்கருதி இடத்தாற் செயின்Gnaalam Karudhinung Kaikootung Kaalam Karudhi Itaththaar SeyinEnglish meaning (G. U. Pope)Though (a man) should meditate (the conquest of) the world, he may accomplish it if he acts in the right time, and at the right placeEnglish verse translation (G. U. Pope)The pendant world's dominion may be won, In fitting time and place by action doneTamil commentary (Kalaignar)உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்Hindi meaningचाहे तो भूलोक भी, आ जायेगा हाथ । समय समझ कर यदि करे, युक्त स्थान के साथ ॥Chapter 49: காலமறிதல்
Kural 485காலங் கருதி இருப்பர் கலங்காதுஞாலங் கருது பவர்Kaalam Karudhi Iruppar Kalangaadhu Gnaalam Karudhu PavarEnglish meaning (G. U. Pope)They who thoughtfully consider and wait for the (right) time (for action), may successfully meditate (the conquest of) the worldEnglish verse translation (G. U. Pope)Who think the pendant world itself to subjugate, With mind unruffled for the fitting time must waitTamil commentary (Kalaignar)கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்Hindi meaningजिनको निश्चित रूप से, विश्व-विजय की चाह । उचित समय की ताक में, वें हैं बेपरवाह ॥Chapter 49: காலமறிதல்
Kural 486ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்தாக்கற்குப் பேருந் தகைத்துOokka Mutaiyaan Otukkam Porudhakar Thaakkarkup Perun ThakaiththuEnglish meaning (G. U. Pope)The self-restraint of the energetic (while waiting for a suitable opportunity), is like the drawing back of a fighting-ram in order to buttEnglish verse translation (G. U. Pope)The men of mighty power their hidden energies repress, As fighting ram recoils to rush on foe with heavier stressTamil commentary (Kalaignar)கொடுமைகளைக் கண்டும்கூட உறுதி படைத்தவர்கள் அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல; அது ஆட்டுக்கடா ஒன்று தனது பகையைத் தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு வாங்குவதைப் போன்றதாகும்Hindi meaningरहता है यों सिकुड़ नृप, रखते हुए बिसात । ज्यों मेढ़ा पीछे हटे, करने को आघात ॥Chapter 49: காலமறிதல்
Kural 487பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்Pollena Aange Puramveraar Kaalampaarththu Ulverppar Olli YavarEnglish meaning (G. U. Pope)The wise will not immediately and hastily shew out their anger; they will watch their time, and restrain it withinEnglish verse translation (G. U. Pope)The glorious once of wrath enkindled make no outward show, At once; they bide their time, while hidden fires within them glowTamil commentary (Kalaignar)பகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல்Hindi meaningरूठते न झट प्रगट कर, रिपु-अति से नरनाह । पर कुढ़ते हैं वे सुधी, देख समय की राह ॥Chapter 49: காலமறிதல்
Kural 488செறுநரைக் காணிற் சுமக்க இறுவரைகாணிற் கிழக்காந் தலைSerunaraik Kaanin Sumakka Iruvarai Kaanin Kizhakkaam ThalaiEnglish meaning (G. U. Pope)If one meets his enemy, let him show him all respect, until the time for his destruction is come; when that is come, his head will be easily brought lowEnglish verse translation (G. U. Pope)If foes' detested form they see, with patience let them bear; When fateful hour at last they spy,- the head lies thereTamil commentary (Kalaignar)பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்Hindi meaningरिपु को असमय देख कर, सिर पर ढो संभाल । सिर के बल गिर वह मिटे, आते अन्तिम काल ॥Chapter 49: காலமறிதல்
Kural 489எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையேசெய்தற் கரிய செயல்Eydhar Kariyadhu Iyaindhakkaal Annilaiye Seydhar Kariya SeyalEnglish meaning (G. U. Pope)If a rare opportunity occurs, while it lasts, let a man do that which is rarely to be accomplished (but for such an opportunity)English verse translation (G. U. Pope)When hardest gain of opportunity at last is won, With promptitude let hardest deed be doneTamil commentary (Kalaignar)கிடைப்பதற்கு அரிய காலம் வாயக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்Hindi meaningदुर्लभ अवसर यदि मिले, उसको खोने पूर्व । करना कार्य उसी समय, जो दुष्कर था पूर्व ॥Chapter 49: காலமறிதல்
Kural 490கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்குத்தொக்க சீர்த்த இடத்துKokkokka Koompum Paruvaththu Matradhan Kuththokka Seerththa ItaththuEnglish meaning (G. U. Pope)At the time when one should use self-control, let him restrain himself like a heron; and, let him like it, strike, when there is a favourable opportunityEnglish verse translation (G. U. Pope)As heron stands with folded wing, so wait in waiting hour; As heron snaps its prey, when fortune smiles, put forth your powerTamil commentary (Kalaignar)காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும் காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்Hindi meaningबक सम रहना सिकुड़ कर, जब करना नहिं वार । चोंच-मार उसकी यथा, पा कर समय, प्रहार ॥Chapter 49: காலமறிதல்