Kural 471வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்துணைவலியுந் தூக்கிச் செயல்Vinaivaliyum Thanvaliyum Maatraan Valiyum Thunaivaliyum Thookkich CheyalEnglish meaning (G. U. Pope)Let (one) weigh well the strength of the deed (he purposes to do), his own strength, the strength of his enemy, and the strength of the allies (of both), and then let him actEnglish verse translation (G. U. Pope)The force the strife demands, the force he owns, the force of foes, The force of friends; these should he weigh ere to the war he goesTamil commentary (Kalaignar)செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்Hindi meaningनिज बल रिपु-बल कार्य-बल, साथी-बल भी जान । सोच-समझ कर चाहिये, करना कार्य निदान ॥Chapter 48: வலியறிதல்
Kural 472ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்செல்வார்க்குச் செல்லாத தில்Olva Tharivadhu Arindhadhan Kandhangich Chelvaarkkuch Chellaadhadhu IlEnglish meaning (G. U. Pope)There is nothing which may not be accomplished by those who, before they attack (an enemy), make themselves acquainted with their own ability, and with whatever else is (needful) to be known, andEnglish verse translation (G. U. Pope)Who know what can be wrought, with knowledge of the means, on this, Their mind firm set, go forth, nought goes with them amissTamil commentary (Kalaignar)ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லைHindi meaningसाध्य कार्य को समझ कर, समझ कार्य हित ज्ञेय । जम कर धावा जो करे, उसको कुछ न अजेय ॥Chapter 48: வலியறிதல்
Kural 473உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கிஇடைக்கண் முரிந்தார் பலர்Utaiththam Valiyariyaar Ookkaththin Ookki Itaikkan Murindhaar PalarEnglish meaning (G. U. Pope)There are many who, ignorant of their (want of) power (to meet it), have haughtily set out to war, and broken down in the midst of itEnglish verse translation (G. U. Pope)Ill-deeming of their proper powers, have many monarchs striven, And midmost of unequal conflict fallen asunder rivenTamil commentary (Kalaignar)தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டுHindi meaningबोध नहीं निज शक्ति का, वश हो कर उत्साह । कार्य शुरू कर, बीच में, मिटे कई नरनाह ॥Chapter 48: வலியறிதல்
Kural 474அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னைவியந்தான் விரைந்து கெடும்Amaindhaang Kozhukaan Alavariyaan Thannai Viyandhaan Viraindhu KetumEnglish meaning (G. U. Pope)59 He will quickly perish who, ignorant of his own resources flatters himself of his greatness, and doesEnglish verse translation (G. U. Pope)Who not agrees with those around, no moderation knows, In self-applause indulging, swift to ruin goesTamil commentary (Kalaignar)மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்Hindi meaningशान्ति-युक्त बरबात बिन, निज बल मान न जान । अहम्मन्य भी जो रहे, शीघ्र मिटेगा जान ॥Chapter 48: வலியறிதல்
Kural 475பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்சால மிகுத்துப் பெயின்Peelipey Saakaatum Achchirum Appantanjjch Aala Mikuththup PeyinEnglish meaning (G. U. Pope)The axle tree of a bandy, loaded only with peacocks' feathers will break, if it be greatly overloadedEnglish verse translation (G. U. Pope)With peacock feathers light, you load the wain; Yet, heaped too high, the axle snaps in twainTamil commentary (Kalaignar)மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முரிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்Hindi meaningमोर-पंख से ही सही, छकड़ा लादा जाय । यदि लादो वह अत्यधिक, अक्ष भग्न हो जाय ॥Chapter 48: வலியறிதல்
Kural 476நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்உயிர்க்கிறுதி ஆகி விடும்Nunikkompar Erinaar Aqdhiran Thookkin Uyirkkirudhi Aaki VitumEnglish meaning (G. U. Pope)There will be an end to the life of him who, having climbed out to the end of a branch, ventures to go furtherEnglish verse translation (G. U. Pope)Who daring climbs, and would himself upraise Beyond the branch's tip, with life the forfeit paysTamil commentary (Kalaignar)தன்னைப்பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்Hindi meaningचढ़ा उच्चतम डाल पर, फिर भी जोश अनंत । करके यदि आगे बढ़े, होगा जीवन-अंत ॥Chapter 48: வலியறிதல்
Kural 477ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்போற்றி வழங்கு நெறிAatrin Aravarindhu Eeka Adhuporul Potri Vazhangu NeriEnglish meaning (G. U. Pope)Let a man know the measure of his ability (to give), and let him give accordingly; such giving is the way to preserve his propertyEnglish verse translation (G. U. Pope)With knowledge of the measure due, as virtue bids you give! That is the way to guard your wealth, and seemly liveTamil commentary (Kalaignar)வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும்Hindi meaningनिज धन की मात्रा समझ, करो रीती से दान । जीने को है क्षेम से, उचित मार्ग वह जान ॥Chapter 48: வலியறிதல்
Kural 478ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லைபோகா றகலாக் கடைAakaaru Alavitti Thaayinung Ketillai Pokaaru Akalaak KataiEnglish meaning (G. U. Pope)Even though the income (of a king) be small, it will not cause his (ruin), if his outgoings be not larger than his incomeEnglish verse translation (G. U. Pope)Incomings may be scant; but yet, no failure there, If in expenditure you rightly learn to spareTamil commentary (Kalaignar)எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லைHindi meaningतंग रहा तो कुछ नहीं, धन आने का मार्ग । यदि विस्तृत भी ना रहा, धन जाने का मार्ग ॥Chapter 48: வலியறிதல்
Kural 479அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோலஇல்லாகித் தோன்றாக் கெடும்Alavaraindhu Vaazhaadhaan Vaazhkkai Ulapola Illaakith Thondraak KetumEnglish meaning (G. U. Pope)The prosperity of him who lives without knowing the measure (of his property), will perish, even while it seems to continueEnglish verse translation (G. U. Pope)Who prosperous lives and of enjoyment knows no bound, His seeming wealth, departing, nowhere shall be foundTamil commentary (Kalaignar)இருப்பது, இயற்றக்கூடியது, இனியும் ஈட்டக்கூடியது ஆகியவற்றின் அளவு அறிந்து செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ளாவிட்டால், வலிமையோ அல்லது வளமோ இருப்பதுபோல் தோன்றினாலும்கூட இல்லாமல் மறைந்து போய்விடும்Hindi meaningनिज धन की सीमा समझ, यदि न किया निर्वाह । जीवन समृद्ध भासता, हो जायगा तबाह ॥Chapter 48: வலியறிதல்
Kural 480உளவரை தூக்காத ஒப்புர வாண்மைவளவரை வல்லைக் கெடும்Ulavarai Thookkaadha Oppura Vaanmai Valavarai Vallaik KetumEnglish meaning (G. U. Pope)The measure of his wealth will quickly perish, whose liberality weighs not the measure of his propertyEnglish verse translation (G. U. Pope)Beneficence that measures not its bound of means, Will swiftly bring to nought the wealth on which it leansTamil commentary (Kalaignar)தன்னிடமுள்ள பொருளின் அளவை ஆராய்ந்து பார்க்காமல் அளவின்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவனது வளம் விரைவில் கெடும்Hindi meaningलोकोपकारिता हुई, धन-सीमा नहिं जान । तो सीमा संपत्ति की, शीघ्र मिटेगी जान ॥Chapter 48: வலியறிதல்