Kural 311சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னாசெய்யாமை மாசற்றார் கோள்Sirappeenum Selvam Perinum Pirarkku Innaa Seyyaamai Maasatraar KolEnglish meaning (G. U. Pope)It is the determination of the spotless not to cause sorrow to others, although they could (by so causing) obtain the wealth which confers greatnessEnglish verse translation (G. U. Pope)Though ill to neighbour wrought should glorious pride of wealth secure, No ill to do is fixed decree of men in spirit pureTamil commentary (Kalaignar)மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்Hindi meaningतप-प्राप्र धन भी मिले, फिर भी साधु-सुजान । हानि न करना अन्य की, मानें लक्ष्य महान ॥Chapter 32: இன்னா செய்யாமை
Kural 312கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னாசெய்யாமை மாசற்றார் கோள்Karuththuinnaa Seydhavak Kannum Maruththinnaa Seyyaamai Maasatraar KolEnglish meaning (G. U. Pope)It is the determination of the spotless not to do evil, even in return, to those who have cherished enmity and done them evilEnglish verse translation (G. U. Pope)Though malice work its worst, planning no ill return, to endure, And work no ill, is fixed decree of men in spirit pureTamil commentary (Kalaignar)சினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும்Hindi meaningबुरा किया यदि क्रोध से, फिर भी सधु-सुजान । ना करना प्रतिकार ही, मानें लक्ष्य महान ॥Chapter 32: இன்னா செய்யாமை
Kural 313செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்உய்யா விழுமந் தரும்Seyyaamal Setraarkkum Innaadha Seydhapin Uyyaa Vizhuman TharumEnglish meaning (G. U. Pope)In an ascetic inflict suffering even on those who hate him, when he has not done them any evil, it will afterwards give him irretrievable sorrowEnglish verse translation (G. U. Pope)Though unprovoked thy soul malicious foes should sting, Retaliation wrought inevitable woes will bringTamil commentary (Kalaignar)யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும்Hindi meaning‘बुरा किया कारण बिना’, करके यही विचार । किया अगर प्रतिकार तो, होगा दुःख अपार ॥Chapter 32: இன்னா செய்யாமை
Kural 314இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயஞ் செய்து விடல்Innaasey Thaarai Oruththal Avarnaana Nannayanj Cheydhu VitalEnglish meaning (G. U. Pope)The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sidesEnglish verse translation (G. U. Pope)To punish wrong, with kindly benefits the doers ply; Thus shame their souls; but pass the ill unheeded byTamil commentary (Kalaignar)நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்Hindi meaningबुरा किया तो कर भला, बुरा भला फिर भूल । पानी पानी हो रहा, बस उसको यह शूल ॥Chapter 32: இன்னா செய்யாமை
Kural 315அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்தந்நோய்போற் போற்றாக் கடைArivinaan Aakuva Thunto Piridhinnoi Thannoipol Potraak KataiEnglish meaning (G. U. Pope)What benefit has he derived from his knowledge, who does not endeavour to keep off pain from another as much as from himself ?English verse translation (G. U. Pope)From wisdom's vaunted lore what doth the learner gain, If as his own he guard not others' souls from painTamil commentary (Kalaignar)பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லைHindi meaningमाने नहिं पर दुःख को, यदि निज दुःख समान । तो होता क्या लाभ है, रखते तत्वज्ञान ॥Chapter 32: இன்னா செய்யாமை
Kural 316இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமைவேண்டும் பிறன்கட் செயல்Innaa Enaththaan Unarndhavai Thunnaamai Ventum Pirankan SeyalEnglish meaning (G. U. Pope)Let not a man consent to do those things to another which, he knows, will cause sorrowEnglish verse translation (G. U. Pope)What his own soul has felt as bitter pain, From making others feel should man abstainTamil commentary (Kalaignar)ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்Hindi meaningकोई समझे जब स्वयं, बुरा फलाना कर्म । अन्यों पर उस कर्म को, नहीं करे, यह धर्म ॥Chapter 32: இன்னா செய்யாமை
Kural 317எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்மாணாசெய் யாமை தலைEnaiththaanum Egngnaandrum Yaarkkum Manaththaanaam Maanaasey Yaamai ThalaiEnglish meaning (G. U. Pope)It is the chief of all virtues not knowingly to do any person evil, even in the lowest degree, and at any timeEnglish verse translation (G. U. Pope)To work no wilful woe, in any wise, through all the days, To any living soul, is virtue's highest praiseTamil commentary (Kalaignar)எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால்கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்Hindi meaningकिसी व्यक्ति को उल्प भी, जो भी समय अनिष्ट । मनपूर्वक करना नहीं, सबसे यही वरिष्ठ ॥Chapter 32: இன்னா செய்யாமை
Kural 318தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோமன்னுயிர்க் கின்னா செயல்Thannuyirkaku Ennaamai Thaanarivaan Enkolo Mannuyirkku Innaa SeyalEnglish meaning (G. U. Pope)Why does a man inflict upon other creatures those sufferings, which he has found by experience are sufferings to himself ?English verse translation (G. U. Pope)Whose soul has felt the bitter smart of wrong, how can He wrongs inflict on ever-living soul of manTamil commentary (Kalaignar)பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?Hindi meaningजिससे अपना अहित हो, उसका है दृढ़ ज्ञान । फिर अन्यों का अहित क्यों, करता है नादान ॥Chapter 32: இன்னா செய்யாமை
Kural 319பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னாபிற்பகல் தாமே வரும்Pirarkkinnaa Murpakal Seyyin Thamakku Innaa Pirpakal Thaame VarumEnglish meaning (G. U. Pope)If a man inflict sorrow upon others in the morning, it will come upon him unsought in the very eveningEnglish verse translation (G. U. Pope)If, ere the noontide, you to others evil do, Before the eventide will evil visit youTamil commentary (Kalaignar)பிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்Hindi meaningदिया सबेरे अन्य को, यदि तुमने संताप । वही ताप फिर साँझ को, तुमपर आवे आप ॥Chapter 32: இன்னா செய்யாமை
Kural 320நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்நோயின்மை வேண்டு பவர்Noyellaam Noiseydhaar Melavaam Noiseyyaar Noyinmai Ventu PavarEnglish meaning (G. U. Pope)Sorrow will come upon those who cause pain to others; therfore those, who desire to be free from sorrow, give no pain to othersEnglish verse translation (G. U. Pope)O'er every evil-doer evil broodeth still; He evil shuns who freedom seeks from illTamil commentary (Kalaignar)தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாதுHindi meaningजो दुःख देगा अन्य को, स्वयं करे दुःख-भोग । दुःख-वर्जन की चाह से, दुःख न दें बुध लोग ॥Chapter 32: இன்னா செய்யாமை