Kural 211கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டென்னாற்றுங் கொல்லோ உலகுKaimmaaru Ventaa Katappaatu Maarimaattu En Aatrung Kollo UlakuEnglish meaning (G. U. Pope)Benevolence seeks not a return. What does the world give back to the clouds ?English verse translation (G. U. Pope)Duty demands no recompense; to clouds of heaven, By men on earth, what answering gift is givenTamil commentary (Kalaignar)கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்Hindi meaningउपकारी नहिं चाहते, पाना प्रत्युपकार । बादल को बदला भला, क्या देता संसार ॥Chapter 22: ஒப்புரவறிதல்
Kural 212தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்குவேளாண்மை செய்தற் பொருட்டுThaalaatrith Thandha Porulellaam Thakkaarkku Velaanmai Seydhar PoruttuEnglish meaning (G. U. Pope)All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolenceEnglish verse translation (G. U. Pope)The worthy say, when wealth rewards their toil-spent hours, For uses of beneficence alone 'tis oursTamil commentary (Kalaignar)தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்Hindi meaningबहु प्रयत्न से जो जुड़ा, योग्य व्यक्ति के पास । लोगों के उपकार हित, है वह सब धन-रास ॥Chapter 22: ஒப்புரவறிதல்
Kural 213புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதேஒப்புரவின் நல்ல பிறPuththe Lulakaththum Eentum Peralaridhe Oppuravin Nalla PiraEnglish meaning (G. U. Pope)It is difficult to obtain another good equal to benevolence either in this world or in that of the godsEnglish verse translation (G. U. Pope)To 'due beneficence' no equal good we know, Amid the happy gods, or in this world belowTamil commentary (Kalaignar)பிறர்க்கு உதவிடும் பண்பாகிய ``ஒப்புரவு'' என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிதுHindi meaningकिया भाव निष्काम से, जनोपकार समान । स्वर्ग तथा भू लोक में दुष्कर जान ॥Chapter 22: ஒப்புரவறிதல்
Kural 214ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்செத்தாருள் வைக்கப் படும்Oththa Tharavon Uyirvaazhvaan Matraiyaan Seththaarul Vaikkap PatumEnglish meaning (G. U. Pope)He truly lives who knows (and discharges) the proper duties (of benevolence) He who knows them not will be reckoned among the deadEnglish verse translation (G. U. Pope)Who knows what's human life's befitting grace, He lives; the rest 'mongst dead men have their placeTamil commentary (Kalaignar)ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான்Hindi meaningज्ञाता शिष्टाचार का, है मनुष्य सप्राण ॥ मृत लोगों में अन्य की, गिनती होती जान ॥Chapter 22: ஒப்புரவறிதல்
Kural 215ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்பேரறி வாளன் திருOoruni Neernirain Thatre Ulakavaam Perari Vaalan ThiruEnglish meaning (G. U. Pope)The wealth of that man of eminent knowledge who desires to exercise the benevolence approved of by the world, is like the full waters of a city-tankEnglish verse translation (G. U. Pope)The wealth of men who love the 'fitting way,' the truly wise, Is as when water fills the lake that village needs suppliesTamil commentary (Kalaignar)பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்Hindi meaningपानी भरा तड़ाग ज्यों, आवे जग का काम । महा सुधी की संपदा, है जन-मन-सुख धाम ॥Chapter 22: ஒப்புரவறிதல்
Kural 216பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்நயனுடை யான்கண் படின்Payanmaram Ulloorp Pazhuththatraal Selvam Nayanutai Yaankan PatinEnglish meaning (G. U. Pope)The wealth of a man (possessed of the virtue) of benevolence is like the ripening of a fruitful tree in the midst of a townEnglish verse translation (G. U. Pope)A tree that fruits in th' hamlet's central mart, Is wealth that falls to men of liberal heartTamil commentary (Kalaignar)ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்Hindi meaningशिष्ट जनों के पास यदि, आश्रित हो संपत्ति । ग्राम-मध्य ज्यों वृक्षवर, पावे फल-संपत्ति ॥Chapter 22: ஒப்புரவறிதல்
Kural 217மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்பெருந்தகை யான்கண் படின்Marundhaakith Thappaa Maraththatraal Selvam Perundhakai Yaankan PatinEnglish meaning (G. U. Pope)If wealth be in the possession of a man who has the great excellence (of benevolence), it is like a tree which as a medicine is an infallible cure for diseaseEnglish verse translation (G. U. Pope)Unfailing tree that healing balm distils from every part, Is ample wealth that falls to him of large and noble heartTamil commentary (Kalaignar)பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம், செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும்Hindi meaningचूके बिन ज्यों वृक्ष का, दवा बने हर अंग । त्यों धन हो यदि वह रहे, उपकारी के संग ॥Chapter 22: ஒப்புரவறிதல்
Kural 218இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்கடனறி காட்சி யவர்Itanil Paruvaththum Oppuravirku Olkaar Katanari Kaatchi YavarEnglish meaning (G. U. Pope)The wise who know what is duty will not scant their benevolence even when they are without wealthEnglish verse translation (G. U. Pope)E'en when resources fall, they weary not of 'kindness due,'- They to whom Duty's self appears in vision trueTamil commentary (Kalaignar)தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர்Hindi meaningसामाजिक कर्तव्य का, जिन सज्जन को ज्ञान । उपकृति से नहिं चूकते, दारिदवश भी जान ॥Chapter 22: ஒப்புரவறிதல்
Kural 219நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீரசெய்யா தமைகலா வாறுNayanutaiyaan Nalkoorndhaa Naadhal Seyumneera Seyyaadhu Amaikalaa VaaruEnglish meaning (G. U. Pope)The poverty of a benevolent man, is nothing but his inability to exercise the sameEnglish verse translation (G. U. Pope)The kindly-hearted man is poor in this alone, When power of doing deeds of goodness he finds noneTamil commentary (Kalaignar)பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான்Hindi meaningउपकारी को है नहीं, दरिद्रता की सोच । ‘मैं कृतकृत्य नहीं हुआ’ उसे यही संकोच ॥Chapter 22: ஒப்புரவறிதல்
Kural 220ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்விற்றுக்கோள் தக்க துடைத்துOppuravi Naalvarum Ketenin Aqdhoruvan Vitrukkol Thakka ThutaiththuEnglish meaning (G. U. Pope)If it be said that loss will result from benevolence, such loss is worth being procured even by the sale of one's selfEnglish verse translation (G. U. Pope)Though by 'beneficence,' the loss of all should come, 'Twere meet man sold himself, and bought it with the sumTamil commentary (Kalaignar)பிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக் கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும்Hindi meaningलोकोपकारिता किये, यदि होगा ही नाश । अपने को भी बेच कर, क्रय-लायक वह नाश ॥Chapter 22: ஒப்புரவறிதல்