Kural 1267: Mutual Desire
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்ணன்ன கேளிர் வரின்
Pulappenkol Pulluven Kollo Kalappenkol
Kananna Kelir Viran
On the return of him who is as dear as my eyes, am I displeased or am I to embrace (him); or am I to do both?
கண்ணின் மணியாம் என் காதலர் வந்தவுடன், பிரிந்திருந்த துயரின் காரணமாக அவருடன் ஊடல், கொள்வேனோ? அல்லது கட்டித் தழுவிக் கொள்வேனோ? அல்லது ஊடுதல் கூடுதல் ஆகிய இரண்டையும் இணைத்துச் செய்வேனோ? ஒன்றுமே புரியவில்லையே எனக்கு; அந்த இன்பத்தை நினைக்கும்போது
Chapter 127: அவர்வயின் விதும்பல்