Kural 1248: Soliloquy
பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதையென் நெஞ்சு
Parindhavar Nalkaarendru Engip Pirindhavar
Pinselvaai Pedhaien Nenju
You are a fool, O my soul! to go after my departed one, while you mourn that he is not kind enough to favour you
நம்மீது இரக்கமின்றிப் பிரிந்து விட்டாரேயென்று ஏங்கிடும் அதே வேளையில் பிரிந்தவர் பின்னாலேயே சென்று கொண்டிருக்கும் என் நெஞ்சம் ஓர் அறிவற்ற பேதை போன்றதாகும்
Chapter 125: நெஞ்சொடு கிளத்தல்