Kural 931வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்றுVentarka Vendritinum Soodhinai Vendradhooum Thoontirpon Meenvizhungi AtruEnglish meaning (G. U. Pope)Though able to win, let not one desire gambling; (for) even what is won is like a fish swallowing the iron in fish-hookEnglish verse translation (G. U. Pope)Seek not the gamester's play; though you should win, Your gain is as the baited hook the fish takes inTamil commentary (Kalaignar)வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது அந்த வெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும் விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கௌவிக் கொண்டது போலாகிவிடும்Hindi meaningचाह जुए की हो नहीं, यद्यपि जय स्वाधीन । जय भी तो कांटा सदृश, जिसे निगलता मीन ॥Chapter 94: சூது
Kural 932ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்நன்றெய்தி வாழ்வதோர் ஆறுOndreydhi Noorizhakkum Soodharkkum Untaangol Nandreydhi Vaazhvadhor AaruEnglish meaning (G. U. Pope)That they may good obtain, and see a prosperous day? Is there indeed a means of livelihood that can bestow happiness on gamblers who gain one and lose a hundred?English verse translation (G. U. Pope)Is there for gamblers, too, that gaining one a hundred lose, some way That they may good obtain, and see a prosperous dayTamil commentary (Kalaignar)ஒரு வெற்றியைப் பெற்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து ஆடி நூறு தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் சூதாடிகளின் வாழ்க்கையில் நலம் ஏற்பட வழி ஏது?Hindi meaningलाभ, जुआरी, एक कर, फिर सौ को खो जाय । वह भी क्या सुख प्राप्ति का, जीवन-पथ पा जाय ॥Chapter 94: சூது
Kural 933உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம்போஒய்ப் புறமே படும்Urulaayam Ovaadhu Koorin Porulaayam Pooip Purame PatumEnglish meaning (G. U. Pope)If the king is incessantly addicted to the rolling dice in the hope of gain, his wealth and the resources thereof will take their departure and fall into other's handsEnglish verse translation (G. U. Pope)If prince unceasing speak of nought but play, Treasure and revenue will pass from him awayTamil commentary (Kalaignar)பணையம் வைத்து இடைவிடாமல் சூதாடுவதை ஒருவன் பழக்கமாகவே கொள்வானேயானால் அவன் செல்வமும் அந்தச் செல்வத்தை ஈட்டும் வழிமுறையும் அவனைவிட்டு நீங்கிவிடும்Hindi meaningपासा फेंक सदा रहा, करते धन की आस । उसका धन औ’ आय सब, चलें शत्रु के पास ॥Chapter 94: சூது
Kural 934சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்வறுமை தருவதொன் றில்Sirumai Palaseydhu Seerazhikkum Soodhin Varumai Tharuvadhondru IlEnglish meaning (G. U. Pope)There is nothing else that brings (us) poverty like gambling which causes many a misery and destroys (one's) reputationEnglish verse translation (G. U. Pope)Gaming brings many woes, and ruins fair renown; Nothing to want brings men so surely downTamil commentary (Kalaignar)பல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைப் கெடுத்த, வறுமையிலும் ஆழ்த்துவதற்குச் சூதாட்டத்தைப் போன்ற தீமையான செயல் வேறொன்றும் இல்லைHindi meaningकरता यश का नाश है, दे कर सब दुख-जाल । और न कोई द्यूत सम, बनायगा कंगाल ॥Chapter 94: சூது
Kural 935கவறும் கழகமும் கையும் தருக்கிஇவறியார் இல்லாகி யார்Kavarum Kazhakamum Kaiyum Tharukki Ivariyaar Illaaki YaarEnglish meaning (G. U. Pope)Penniless are those who by reason of their attachment would never forsake gambling, the gamblingplace and the handling (of dice)English verse translation (G. U. Pope)The dice, and gaming-hall, and gamester's art, they eager sought, Thirsting for gain- the men in other days who came to noughtTamil commentary (Kalaignar)சூதாடும் இடம், அதற்கான கருவி, அதற்குரிய முயற்சி ஆகியவற்றைக் கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவே ஆகிவிடுவார்கள்Hindi meaningपासा, जुआ-घर तथा, हस्य-कुशलता मान । जुए को हठ से पकड़, निर्धन हुए निदान ॥Chapter 94: சூது
Kural 936அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்முகடியான் மூடப்பட் டார்Akataaraar Allal Uzhapparsoo Thennum Mukatiyaan Mootappat TaarEnglish meaning (G. U. Pope)Those who are swallowed by the goddess called "gambling" will never have their hunger satisfied, but suffer the pangs of hell in the next worldEnglish verse translation (G. U. Pope)Gambling's Misfortune's other name: o'er whom she casts her veil, They suffer grievous want, and sorrows sore bewailTamil commentary (Kalaignar)சூது எனப்படும் தீமையின் வலையில் விழுந்தவர்கள் வயிறார உண்ணவும் விரும்பாமல் துன்பத்திலும் உழன்று வருந்துவார்கள்Hindi meaningजुआरूप ज्येष्ठा जिन्हें, मूँह में लेती ड़ाल । उन्हें न मिलता पेट भर, भोगें दुख कराल ॥Chapter 94: சூது
Kural 937பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்கழகத்துக் காலை புகின்Pazhakiya Selvamum Panpum Ketukkum Kazhakaththuk Kaalai PukinEnglish meaning (G. U. Pope)To waste time at the place of gambling will destroy inherited wealth and goodness of characterEnglish verse translation (G. U. Pope)Ancestral wealth and noble fame to ruin haste, If men in gambler's halls their precious moments wasteTamil commentary (Kalaignar)சூதாடும் இடத்திலேயே ஒருவர் தமது காலத்தைக் கழிப்பாரேயானால், அது அவருடைய மூதாதையர் தேடிவைத்த சொத்துகளையும் நற்பண்பையும் நாசமாக்கிவிடும்Hindi meaningद्यूत-भुमि में काल सब, जो करना है वास । करता पैतृक धन तथा, श्रेष्ठ गुणों का नाश ॥Chapter 94: சூது
Kural 938பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்தல்லல் உழப்பிக்கும் சூதுPorul Ketuththup Poimer Koleei Arulketuththu Allal Uzhappikkum SoodhuEnglish meaning (G. U. Pope)Gambling destroys property, teaches falsehood, puts an end to benevolence, and brings in misery (here and hereafter)English verse translation (G. U. Pope)Gambling wastes wealth, to falsehood bends the soul: it drives away All grace, and leaves the man to utter misery a preyTamil commentary (Kalaignar)பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி, அருள் நெஞ்சத்தையும் மாற்றித், துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூதுHindi meaningपेरित मिथ्या-कर्म में, करके धन को नष्ट । दया-धर्म का नाश कर, जुआ दिलाता कष्ट ॥Chapter 94: சூது
Kural 939உடைசெல்வம் ஊணொளி கல்வியென் றைந்தும்அடையாவாம் ஆயங் கொளின்Utaiselvam Oonoli Kalviendru Aindhum Ataiyaavaam Aayang KolinEnglish meaning (G. U. Pope)The habit of gambling prevents the attainment of these five: clothing, wealth, food, fame and learningEnglish verse translation (G. U. Pope)Clothes, wealth, food, praise, and learning, all depart From him on gambler's gain who sets his heartTamil commentary (Kalaignar)சூதாட்டத்திற்கு அடிமையாகி விட்டவர்களை விட்டுப் புகழும், கல்வியும், செல்வமும், உணவும், உடையும் அகன்று ஒதுங்கி விடும்Hindi meaningरोटी कपड़ा संपदा, विद्या औ’ सम्मान । पाँचों नहिं उनके यहाँ, जिन्हें जुए की बान ॥Chapter 94: சூது
Kural 940இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்உழத்தொறூஉம் காதற் றுயிர்Izhaththoruvum Kaadhalikkum Soodhepol Thunpam Uzhaththoruvum Kaadhatru UyirEnglish meaning (G. U. Pope)As the gambler loves (his vice) the more he loses by it, so does the soul love (the body) the more it suffers through itEnglish verse translation (G. U. Pope)Howe'er he lose, the gambler's heart is ever in the play; E'en so the soul, despite its griefs, would live on earth alwayTamil commentary (Kalaignar)பொருளை இழக்க இழக்கச் சூதாட்டத்தின் மீது ஏற்படுகிற ஆசையும், உடலுக்குத் துன்பம் தொடர்ந்து வரவர உயிர்மீது கொள்ளுகிற ஆசையும் ஒன்றேதான்Hindi meaningखोते खोते धन सभी, यथा जुएँ में मोह । सहते सहते दुःख भी, है जीने में मोह ॥Chapter 94: சூது