Kural 671சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவுதாழ்ச்சியுள் தங்குதல் தீதுSoozhchchi Mutivu Thuniveydhal Aththunivu Thaazhchchiyul Thangudhal TheedhuEnglish meaning (G. U. Pope)Consultation ends in forming a resolution (to act); (but) delay in the execution of that resolve is an evilEnglish verse translation (G. U. Pope)The Resolve is counsel's end, If resolutions halt In weak delays, still unfulfilled, 'tis grievous faultTamil commentary (Kalaignar)ஒரு செயலில் ஈடுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும் முடிவடைந்திருக்க வேண்டும் முடிவெடுத்த பிறகு காலந்தாழ்த்துவது தீதாக முடியும்Hindi meaningनिश्चय कर लेना रहा, विचार का परिणाम । हानि करेगा देर से, रुकना निश्चित काम ॥Chapter 68: வினை செயல்வகை
Kural 672தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்கதூங்காது செய்யும் வினைThoonguka Thoongich Cheyarpaala Thoongarka Thoongaadhu Seyyum VinaiEnglish meaning (G. U. Pope)Sleep over such (actions) as may be slept over; (but) never over such as may not be slept overEnglish verse translation (G. U. Pope)Slumber when sleepy work's in hand beware Thou slumber not when action calls for sleepless careTamil commentary (Kalaignar)நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதித்துச் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாதுHindi meaningजो विलम्ब के योग्य है, करो उसे सविलम्ब । जो होना अविलम्ब ही, करो उसे अविलम्ब ॥Chapter 68: வினை செயல்வகை
Kural 673ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்செல்லும்வாய் நோக்கிச் செயல்Ollumvaa Yellaam Vinainandre Ollaakkaal Sellumvaai Nokkich CheyalEnglish meaning (G. U. Pope)Whenever it is possible (to overcome your enemy) the act (of fighting) is certainly good; if not, endeavour to employ some more successful methodEnglish verse translation (G. U. Pope)When way is clear, prompt let your action be; When not, watch till some open path you seeTamil commentary (Kalaignar)இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும் இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும்Hindi meaningजहाँ जहाँ वश चल सके, भलाकार्य हो जाय । वश न चले तो कीजिये, संभव देख उपाय ॥Chapter 68: வினை செயல்வகை
Kural 674வினைபகை யென்றிரண்டின் எச்சம் நினையுங்கால்தீயெச்சம் போலத் தெறும்Vinaipakai Endrirantin Echcham Ninaiyungaal Theeyechcham Polath TherumEnglish meaning (G. U. Pope)When duly considered, the incomplete execution of an undertaking and hostility will grow and destroy one like the (unextinguished) remnant of a fireEnglish verse translation (G. U. Pope)With work or foe, when you neglect some little thing, If you reflect, like smouldering fire, 'twill ruin bringTamil commentary (Kalaignar)எற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்Hindi meaningकर्म-शेष रखना तथा, शत्रु जनों में शेष । अग्नि-शेष सम ही करें, दोनों हानि विशेष ॥Chapter 68: வினை செயல்வகை
Kural 675பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும்இருள்தீர எண்ணிச் செயல்Porulkaruvi Kaalam Vinaiyitanotu Aindhum Iruldheera Ennich CheyalEnglish meaning (G. U. Pope)Do an act after a due consideration of the (following) five, viz money, means, time, execution and placeEnglish verse translation (G. U. Pope)Treasure and instrument and time and deed and place of act These five, till every doubt remove, think o'er with care exactTamil commentary (Kalaignar)ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்Hindi meaningधन साधन अवसर तथा, स्थान व निश्चित कर्म । पाँचों पर भ्रम के बिना, विचार कर कर कर्म ॥Chapter 68: வினை செயல்வகை
Kural 676முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும்படுபயனும் பார்த்துச் செயல்Mutivum Itaiyoorum Mutriyaangu Eydhum Patupayanum Paarththuch CheyalEnglish meaning (G. U. Pope)An act is to be performed after considering the exertion required, the obstacles to be encountered, and the great profit to be gained (on its completion)English verse translation (G. U. Pope)Accomplishment, the hindrances, large profits won By effort these compare,- then let the work be doneTamil commentary (Kalaignar)ஈடுபடக்கூடிய ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன், அதற்கான முயற்சிக்கு இடையே வரும் தடைகள், அச்செயலாற்றுதவற்கான முறை ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்Hindi meaningसाधन में श्रम, विघ्न भी, पूरा हो जब कर्म । प्राप लाभ कितना बड़ा, देख इन्हें कर कर्म ॥Chapter 68: வினை செயல்வகை
Kural 677செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினைஉள்ளறிவான் உள்ளங் கொளல்Seyvinai Seyvaan Seyanmurai Avvinai Ullarivaan Ullam KolalEnglish meaning (G. U. Pope)The method of performance for one who has begun an act is to ascertain the mind of him who knows the secret thereofEnglish verse translation (G. U. Pope)Who would succeed must thus begin first let him ask The thoughts of them who thoroughly know the taskTamil commentary (Kalaignar)ஒரு செயலில் ஈடுபடுகிறவன், அச்செயல் குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்Hindi meaningविधि है कर्मी को यही, जब करता है कर्म । उसके अति मर्मज्ञ से, ग्रहण करे वह मर्म ॥Chapter 68: வினை செயல்வகை
Kural 678வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்யானையால் யானையாத் தற்றுVinaiyaan Vinaiyaakkik Kotal Nanaikavul Yaanaiyaal Yaanaiyaath ThatruEnglish meaning (G. U. Pope)To make one undertaking the means of accomplishing another (similar to it) is like making one rutting elephant the means of capturing anotherEnglish verse translation (G. U. Pope)By one thing done you reach a second work's accomplishment; So furious elephant to snare its fellow brute is sentTamil commentary (Kalaignar)ஒரு செயலில் ஈடுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும்Hindi meaningएक कर्म करते हुए, और कर्म हो जाय । मद गज से मद-मत्त गज, जैसे पकड़ा जाय ॥Chapter 68: வினை செயல்வகை
Kural 679நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததேஒட்டாரை ஒட்டிக் கொளல்Nattaarkku Nalla Seyalin Viraindhadhe Ottaarai Ottik KolalEnglish meaning (G. U. Pope)One should rather hasten to secure the alliance of the foes (of one's foes) than perform good offices to one's friendsEnglish verse translation (G. U. Pope)Than kindly acts to friends more urgent thing to do, Is making foes to cling as friends attached to youTamil commentary (Kalaignar)நன்பருக்கு நல்லுதவி செய்வதைக் காட்டிலும் பகைவராயிருப்பவரைத் தம்முடன் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத் தக்கதாகும்Hindi meaningकरने से हित कार्य भी, मित्रों के उपयुक्त । शत्रु जनों को शीघ्र ही, मित्र बनाना युक्त ॥Chapter 68: வினை செயல்வகை
Kural 680உறைசிறியார் உண்ணடுங்கல் அஞ்சிக் குறைபெறிற்கொள்வர் பெரியார்ப் பணிந்துUraisiriyaar Ulnatungal Anjik Kuraiperin Kolvar Periyaarp PanindhuEnglish meaning (G. U. Pope)Ministers of small states, afraid of their people being frightened, will yield to and acknowledge their superior foes, if the latter offer them a chance of reconciliationEnglish verse translation (G. U. Pope)The men of lesser realm, fearing the people's inward dread, Accepting granted terms, to mightier ruler bow the headTamil commentary (Kalaignar)தம்மைவிட வலிமையானவர்களை எதிர்ப்பதற்குத் தம்முடன் இருப்பவர்களே அஞ்சும்போது தாம் எதிர்பார்க்கும் பலன் கிட்டுமானால் அவர்கள் வலியோரை வணங்கி ஏற்றுக் கொள்வார்கள்Hindi meaningभीति समझकर स्वजन की, मंत्री जो कमज़ोर । संधि करेंगे नमन कर, रिपु यदि है बरज़ोर ॥Chapter 68: வினை செயல்வகை