Kural 531இறந்த வெகுளியின் தீதே சிறந்தஉவகை மகிழ்ச்சியிற் சோர்வுIrandha Vekuliyin Theedhe Sirandha Uvakai Makizhchchiyir SorvuEnglish meaning (G. U. Pope)More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joyEnglish verse translation (G. U. Pope)'Tis greater ill, it rapture of o'erweening gladness to the soul Bring self-forgetfulness than if transcendent wrath controlTamil commentary (Kalaignar)அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானதுHindi meaningअमित हर्ष से मस्त हो, रहना असावधान । अमित क्रोध से भी अधिक, हानि करेगा जान ॥Chapter 54: பொச்சாவாமை
Kural 532பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினைநிச்ச நிரப்புக்கொன் றாங்குPochchaappuk Kollum Pukazhai Arivinai Nichcha Nirappuk Kon RaanguEnglish meaning (G. U. Pope)Forgetfulness will destroy fame, even as constant poverty destroys knowledgeEnglish verse translation (G. U. Pope)Perpetual, poverty is death to wisdom of the wise; When man forgets himself his glory diesTamil commentary (Kalaignar)நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல மறதி, புகழை அழித்து விடும்Hindi meaningज्यों है नित्यदारिद्रता, करती बुद्धि-विनाश । त्यों है असावधानता, करती कीर्ति-विनाश ॥Chapter 54: பொச்சாவாமை
Kural 533பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்தெப்பானூ லோர்க்குந் துணிவுPochchaappaark Killai Pukazhmai Adhuulakaththu Eppaalnoo Lorkkum ThunivuEnglish meaning (G. U. Pope)Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the worldEnglish verse translation (G. U. Pope)'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every schoolTamil commentary (Kalaignar)மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்Hindi meaningजो विस्मृत हैं वे नहीं, यश पाने के योग । जग में यों हैं एकमत, शास्त्रकार सब लोग ॥Chapter 54: பொச்சாவாமை
Kural 534அச்ச முடையார்க் கரணில்லை ஆங்கில்லைபொச்சாப் புடையார்க்கு நன்குAchcha Mutaiyaarkku Aranillai Aangillai Pochchaap Putaiyaarkku NankuEnglish meaning (G. U. Pope)Just as the coward has no defence (by whatever fortifications ha may be surrounded), so the thoughtless has no good (whatever advantages he may possess)English verse translation (G. U. Pope)'To cowards is no fort's defence'; e'en so The self-oblivious men no blessing knowTamil commentary (Kalaignar)பயத்தினால் நடுங்குகிறவர்களுக்குத் தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்கான அரண் கட்டப்பட்டிருந்தாலும் எந்தப் பயனுமில்லை அதைப் போலவே என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் மறதி உடையவர்களுக்கு அந்த நிலையினால் எந்தப் பயனுமில்லைHindi meaningलाभ नहीं है दुर्ग से, उनको जो भयशील । वैसे उनको ना भला, जो हैं विस्मृतिशील ॥Chapter 54: பொச்சாவாமை
Kural 535முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழைபின்னூ றிரங்கி விடும்Munnurak Kaavaadhu Izhukkiyaan Thanpizhai Pinnooru Irangi VitumEnglish meaning (G. U. Pope)The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwards repent for his faultEnglish verse translation (G. U. Pope)To him who nought foresees, recks not of anything, The after woe shall sure repentance bringTamil commentary (Kalaignar)முன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன், துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும்Hindi meaningपहले से रक्षा न की, रह कर असावधान । विपदा आने पर रहा, पछताता अज्ञान ॥Chapter 54: பொச்சாவாமை
Kural 536இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமைவாயின் அதுவொப்ப தில்Izhukkaamai Yaarmaattum Endrum Vazhukkaamai Vaayin Adhuvoppadhu IlEnglish meaning (G. U. Pope)There is nothing comparable with the possession of unfailing thoughtfulness at all times; and towards all personsEnglish verse translation (G. U. Pope)Towards all unswerving, ever watchfulness of soul retain, Where this is found there is no greater gainTamil commentary (Kalaignar)ஒருவரிடம், மறவாமை என்னும் பண்பு தவறாமல் பொருந்தியிருக்குமேயானால், அதைவிட அவருக்கு நன்மை தரக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாதுHindi meaningसब जन से सब काल में, अविस्मरण की बान । बरती जाय अचूक तो, उसके है न समान ॥Chapter 54: பொச்சாவாமை
Kural 537அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக்கருவியாற் போற்றிச் செயின்Ariyaendru Aakaadha Illaipoch Chaavaak Karuviyaal Potrich CheyinEnglish meaning (G. U. Pope)There is nothing too difficult to be accomplished, if a man set about it carefully, with unflinching endeavourEnglish verse translation (G. U. Pope)Though things are arduous deemed, there's nought may not be won, When work with mind's unslumbering energy and thought is doneTamil commentary (Kalaignar)மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லைHindi meaningरह कर विस्मृति के बिना, सोच-समझ कर कार्य । यदि करता है तो उसे, कुछ नहिं असाध्य कार्य ॥Chapter 54: பொச்சாவாமை
Kural 538புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யாதிகழ்ந்தார்க் கெழுமையும் இல்Pukazhndhavai Potrich Cheyalventum Seyyaadhu Ikazhndhaarkku Ezhumaiyum IlEnglish meaning (G. U. Pope)Let (a man) observe and do these things which have been praised (by the wise); if he neglects and fails to perform them, for him there will be no (happiness) throughout the seven birthsEnglish verse translation (G. U. Pope)Let things that merit praise thy watchful soul employ; Who these despise attain through sevenfold births no joyTamil commentary (Kalaignar)புகழுக்குரிய கடமைகளைப் போற்றிச் செய்திடல் வேண்டும் அப்படிச் செய்யாமல் புறக்கணிக்கப்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வே இல்லைHindi meaningकरना श्रद्धा-भाव से, शास्त्रकार-स्तुत काम । रहा उपेक्षक, यदि न कर, सात जन्म बेकाम ॥Chapter 54: பொச்சாவாமை
Kural 539இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம்மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்துIkazhchchiyin Kettaarai Ulluka Thaandham Makizhchchiyin Maindhurum PozhdhuEnglish meaning (G. U. Pope)Let (a king) think of those who have been ruined by neglect, when his mind is elated with joyEnglish verse translation (G. U. Pope)Think on the men whom scornful mind hath brought to nought, When exultation overwhelms thy wildered thoughtTamil commentary (Kalaignar)மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும்Hindi meaningजब अपने संतोष में, मस्त बनेंगे आप । गफलत से जो हैं मिटे, उन्हें विचारो आप ॥Chapter 54: பொச்சாவாமை
Kural 540உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான்உள்ளிய துள்ளப் பெறின்Ulliyadhu Eydhal Elidhuman Matrundhaan Ulliyadhu Ullap PerinEnglish meaning (G. U. Pope)It is easy for (one) to obtain whatever he may think of, if he can again think of itEnglish verse translation (G. U. Pope)'Tis easy what thou hast in mind to gain, If what thou hast in mind thy mind retainTamil commentary (Kalaignar)கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும்Hindi meaningबना रहेगा यदि सदा, लक्ष्य मात्र का ध्यान । अपने इच्छित लक्ष्य को, पाना है आसान ॥Chapter 54: பொச்சாவாமை