Kural 201தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்தீவினை யென்னுஞ் செறுக்குTheevinaiyaar Anjaar Vizhumiyaar Anjuvar Theevinai Ennum SerukkuEnglish meaning (G. U. Pope)Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sinEnglish verse translation (G. U. Pope)With sinful act men cease to feel the dread of ill within, The excellent will dread the wanton pride of cherished sinTamil commentary (Kalaignar)தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்Hindi meaningपाप-कर्म के मोह से, डरें न पापी लोग । उससे डरते हैं वही, पुण्य-पुरुष जो लोग ॥Chapter 21: தீவினையச்சம்
Kural 202தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும்Theeyavai Theeya Payaththalaal Theeyavai Theeyinum Anjap PatumEnglish meaning (G. U. Pope)Because evil produces evil, therefore should evil be feared more than fireEnglish verse translation (G. U. Pope)Since evils new from evils ever grow, Evil than fire works out more dreaded woeTamil commentary (Kalaignar)தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்Hindi meaningपाप- कर्म दुखजनक हैं, यह है उनकी रीत । पावक से भीषण समझ, सो होना भयभीत ॥Chapter 21: தீவினையச்சம்
Kural 203அறிவினு ளெல்லாந் தலையென்ப தீயசெறுவார்க்குஞ் செய்யா விடல்Arivinul Ellaan Thalaiyenpa Theeya Seruvaarkkum Seyyaa VitalEnglish meaning (G. U. Pope)So shalt thou wisdom's highest law, 'tis said, fulfilEnglish verse translation (G. U. Pope)Even to those that hate make no return of ill; So shalt thou wisdom's highest law, 'tis said, fulfilTamil commentary (Kalaignar)தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர்Hindi meaningश्रेष्ठ बुद्धिमत्ता कहें, करके सुधी विचार । अपने रिपु का भी कभी, नहिं करना अपकार ॥Chapter 21: தீவினையச்சம்
Kural 204மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடுMarandhum Piranketu Soozharka Soozhin Aranjoozham Soozhndhavan KetuEnglish meaning (G. U. Pope)Even though forgetfulness meditate not the ruin of another Virtue will meditate the ruin of him who thus meditatesEnglish verse translation (G. U. Pope)Though good thy soul forget, plot not thy neighbour's fall, Thy plans shall 'virtue's Power' by ruin to thyself forestallTamil commentary (Kalaignar)மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும்Hindi meaningविस्मृति से भी नर नहीं, सोचे पर की हानि । यदि सोचे तो धर्म भी, सोचे उसकी हानि ॥Chapter 21: தீவினையச்சம்
Kural 205இலனென்று தீயவை செய்யற்க செய்யின்இலனாகும் மற்றுப் பெயர்த்துIlan Endru Theeyavai Seyyarka Seyyin Ilanaakum Matrum PeyarththuEnglish meaning (G. U. Pope)Commit not evil, saying, "I am poor": if you do, you will become poorer stillEnglish verse translation (G. U. Pope)Make not thy poverty a plea for ill; Thy evil deeds will make thee poorer stillTamil commentary (Kalaignar)வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது; அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும்Hindi meaning‘निर्धन हूँ मैं’, यों समझ, करे न कोई पाप । अगर किया तो फिर मिले, निर्धनता-अभिशाप ॥Chapter 21: தீவினையச்சம்
Kural 206தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பாலதன்னை அடல்வேண்டா தான்Theeppaala Thaanpirarkan Seyyarka Noippaala Thannai Atalventaa ThaanEnglish meaning (G. U. Pope)Let him not do evil to others who desires not that sorrows should pursue himEnglish verse translation (G. U. Pope)What ranks as evil spare to do, if thou would'st shun Affliction sore through ill to thee by others doneTamil commentary (Kalaignar)வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்Hindi meaningदुख से यदि दुष्कर्म के, बचने की है राय । अन्यों के प्रति दुष्टता, कभी नहीं की जाय ॥Chapter 21: தீவினையச்சம்
Kural 207எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகைவீயாது பின்சென் றடும்Enaippakai Yutraarum Uyvar Vinaippakai Veeyaadhu Pinsendru AtumEnglish meaning (G. U. Pope)However great be the enmity men have incurred they may still live The enmity of sin will incessantly pursue and killEnglish verse translation (G. U. Pope)From every enmity incurred there is to 'scape, a way; The wrath of evil deeds will dog men's steps, and slayTamil commentary (Kalaignar)ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும்Hindi meaningअति भयकारी शत्रु से, संभव है बच जाय । पाप-कर्म की शत्रुता, पीछा किये सताय ॥Chapter 21: தீவினையச்சம்
Kural 208தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னைவீயா தடியுறைந் தற்றுTheeyavai Seydhaar Ketudhal Nizhaldhannai Veeyaadhu Atiurain ThatruEnglish meaning (G. U. Pope)Destruction will dwell at the heels of those who commit evil even as their shadow that leaves them notEnglish verse translation (G. U. Pope)Man's shadow dogs his steps where'er he wends; Destruction thus on sinful deeds attendsTamil commentary (Kalaignar)ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய செயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்Hindi meaningदुष्ट- कर्म जो भी करे, यों पायेगा नाश । छोड़े बिन पौरों तले, छाँह करे ज्यों वास ॥Chapter 21: தீவினையச்சம்
Kural 209தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்துன்னற்க தீவினைப் பால்Thannaiththaan Kaadhala Naayin Enaiththondrum Thunnarka Theevinaip PaalEnglish meaning (G. U. Pope)If a man love himself, let him not commit any sin however smallEnglish verse translation (G. U. Pope)Beware, if to thyself thyself is dear, Lest thou to aught that ranks as ill draw nearTamil commentary (Kalaignar)தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாதுHindi meaningकोई अपने आपको, यदि करता है प्यार । करे नहीं अत्यल्प भी, अन्यों का अपचार ॥Chapter 21: தீவினையச்சம்
Kural 210அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்தீவினை செய்யான் எனின்Arungetan Enpadhu Arika Marungotith Theevinai Seyyaan EninEnglish meaning (G. U. Pope)Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right pathEnglish verse translation (G. U. Pope)The man, to devious way of sin that never turned aside, From ruin rests secure, whatever ills betideTamil commentary (Kalaignar)வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்கHindi meaningनाशरहित उसको समझ, जो तजकर सन्मार्ग । पाप-कर्म हो नहिं करे, पकड़े नहीं कुमार्ग ॥Chapter 21: தீவினையச்சம்